பொன்னியின் செல்வன் முழுக் கதை - 6..
இளவரசிக்காக இலங்கைக்கு கிளம்புகிறான் வந்திய தேவன். இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த ஆழ்வார்க்கடியான் நம்பி இனி நாமும் இலங்கைக்கு செல்லவேண்டியது தான் என்று புறப்புடுகிறார். இலங்கைக்கு செல்வேண்டுமென்றால் கோடிக்கரையில் இருந்த தான் செல்ல முடியும். அதற்காக வந்திய தேவனும் கோடிக்கரைக்கு வருகிறான். அப்போது படகோட்டி பெண் ஒருவரை பார்க்கிறான் வந்திய தேவன். இவள் பெயர் பூங்குழலி (சமுத்திரகுமாரி). இந்த பெண் வேறுயாரும் கிடையாது, சேந்தனமுதனோட முறைப்பெண் தான். அடுத்த நாள் காலையில் பழுவேட்டரையர்கள் காவலாளிகள் வந்திய தேவனை தேடிக்கொண்டு அங்கையும் வந்துவிடுகிறார். ஆனால், பூங்குழலி புத்திசாலி தனமாக வந்திய தேவனை காப்பாற்றி, படகு மூலம் இலங்கையில் கொண்டுப்போய் சேர்க்கிறாள். அன்னைக்கு இளவரசன் பொன்னியின் செல்வன் (அருள்மொழி வர்மன்) எங்கு இருப்பார் என்பதை தெரிந்துக்கொள்ள ஒரு தீவில் இறங்குகிறார்கள். இதற்கிடையில், ஆழ்வார்க்கடியான் நம்பியும் தனது குரு அநிருத்த பிரம்மராயர் உத்தரவின் படி அருள்மொழி வர்மனை அழைத்துவர இலங்கைக்கு செல்கிறான்.
இதற்கிடையில், சுந்தர சோழரை பார்ப்பதற்காக குந்தவையும், வானதியும் தஞ்சைக்கு வருகிறார்கள். அன்று இரவு படுத்த படிக்கையாக இருக்கும் சுந்தர சோழர் ஏதோவொரு பெண்ணோட நிழலை பார்த்து பயப்படுகிறார். அது வேறு யாருமில்லை பழுவூர் ராணி நந்தினி. அப்போது, தனது மகள் குந்தவையிடம் ஒரு உண்மையை சொல்கிறார். அதாவது, அவர் இலங்கைக்கு போருக்கு சென்றதாகவும், அதில் தோல்வியடைந்து கவலையில் இருந்ததாகவும் கூறுகிறார். அப்போது தான் நான் அந்த ஊமை பெண்ணை பார்த்ததாக சொல்கிறார்கள்.
பின்னர், இருவருக்கும் இடையில் காதல் மலருகிறது. ஆனால், அடுத்த சில நாட்களில் என்னை சோழநாட்டில் இருந்து வீரர்கள் வந்து அழைத்துச் சென்றுவிட்டனர். அப்போது அந்த ஊமை பெண்ணை தனியாக விட்டு வந்துவிடுகிறார். அதன்பிறகு, அந்த ஊமை பெண் சுந்தர சோழரை பார்க்க அரண்மனைக்கு வர, அவருக்கு முடிசூட்டும் விழா நடக்கிறது. இதை பார்த்த அந்த ஊமை பெண் நான் எப்படி அரசனுக்கு மனைவியாக முடியும் என்று நினைத்து தற்கொலை செய்துகிறார்.
பல வருடங்களாக அந்த ஊமை பெண் தான் சுந்தர சோழரோட கனவில் வந்து பயப்படுத்திக் கொண்டிருப்பதாக குந்தவையிடம் கூறுகிறார். இதற்கிடையில், சுந்தர சோழர் குந்தவையிடம் தன்னோட மகன் அருள்மொழி வர்மனைவிட தன்னுடைய பெரியப்பா மகன் மதுராந்தகன் தான் சோழ நாட்டு அரசனாக ஆக வேண்டும் என்று சொல்கிறார். அதன்பின், நந்தினி வந்திய தேவனை சந்திக்க வேண்டும் என்று ஒரு மடல் எழுதி, கந்தமாறனிடம் கொடுத்து அனுப்புகிறாள்.
இதற்கிடையில் வந்திய தேவனை பிடித்துக் கொடுத்தால் சன்மானம் என்று ஊர் முழுக்க தண்டோரா போடுகிறார்கள். இதை அறிந்த ஆதித்த கரிகாலன் நான் அனுப்பிய தூதுவனுக்கு ஒற்றன் என்ற பட்டம் கட்டி பிடித்துக்கொடுத்தால் சன்மானம் வழங்குகிறார்களா? என்று கோவப்படுகிறார். அவர்க்கூட அவருடைய தாத்தா மலையமானும், நண்பன் பல்லவன் பாத்திபேந்திரனும் இருக்கிறார்கள். ஆதித்த கரிகாலன் கடம்பூர் அரண்மனையில் நடந்த விஷயத்தை கேள்விப்பட்டு, சோழ இளவரசன் நான் இங்கு இருக்க வேறொரு வரை அரசனாக்க அந்த பழுவேட்டரையர்கள் யார் என்று கோவப்படுகிறார்.
ஆனால், இந்த நேரத்தில் பழுவேட்டரையர் மேல் போர்த்தொடுத்து தஞ்சைக்கு போக முடியாது. ஏனென்றால், தந்தையையே எதிர்த்து போர் செய்யவருகிறார்கள் என்று தவறாக மக்கள் நினைத்து விடுவார்கள் என்று மலையமான் சொல்கிறார். அப்போது, பாத்திபேந்திரன் ஒரு விஷயத்தை கவனித்து, ஆதித்த கரிகாலனிடம் பழுவேட்டரையர்கள், அவருடைய மனைவி பற்றி பேசினாலே உங்களுடைய முகத்தில் ஒரு வெறுப்பு தெரிவதற்கு என்ன காரணம் என்று கேட்கிறார். அதற்கு ஆதித்த கரிகாலன் நந்தினியை காதலித்ததையும், வீரபாண்டியன் கூட பார்த்ததையும், தனது தந்தையை சிறப்பிடிப்பது பற்றியும் பாத்திபேந்திரனிடம் சொல்கிறார். பின்னர், அருள்மொழி வர்மனை அழைத்து வருமாறு தனது நண்பன் பாத்திபேந்திரனிடம் சொல்கிறார். அவரும் இலங்கைக்கு செல்கிறார்கள்.
வந்திய தேவன், ஆழ்வார்க்கடியான் நம்பி, பாத்திபேந்திரன் என்று மூவரும் அவரை தேடி இலங்கைக்கு வந்துவிட்டனர். அதன்பிறகு ஆழ்வார்க்கடியான் நம்பி, வந்திய தேவன், பொன்னியின் செல்வன் மூவரும் ஒரு இடத்திற்கு செல்ல, அங்கு ரவிதாசன் அவர்களை கொல்ல முயற்சிக்கும்போது, பொன்னியின் செல்வனை காப்பாத்துகிறாள் ஒரு ஊமை பெண். அப்போது அந்த ஊமை பெண்ணை பார்த்து வந்திய தேவன் ஆச்சரியமடைகிறான். ஏனென்றால் அந்த ஊமை பெண் நந்தினியை போலவே இருக்கிறாள். உடனே வந்திய தேவன் பொன்னியின் செல்வனிடம் இவர் நந்தினியா என்று கேட்க, இல்லை இவர்கள் ஊமை பெண் மந்தாகினி என்று சொல்கிறார். இந்த நேரத்தில் பாத்திரபேந்திரனும் அங்கு வந்து, உங்களை ஆதித்த கரிகாலன் உங்களை அழைத்து வருமாறு சொன்னதாக அருள்மொழி வர்மனிடம் கூறுகின்றார்.
ஆனால், அருள்மொழி வர்மன் பழுவேட்டரையரகளுடன் தஞ்சை செல்கிறார். இதற்காக ஒரு கப்பலில் செல்லும்போது அலைச்சீற்றம் ஏற்பட, உடனே இளவரசர் கடலில் மூழ்கி இறந்துவிட்டதாக ஊர் மக்களிடம் தெரிவிக்கின்றனர். இந்த நேரத்தில் நந்தினியும், பெரிய பழுவேட்டரையரும் வரவேற்பதற்காக கோடிக்கரைக்கு செல்கிறார்கள். ஆனால், கடலில் மூழ்கிய வந்திய தேவனையும் அருள்மொழியையும் காப்பாற்றி இரகசியமாக கோடிக்கரைக்கு அழைத்து வருகிறாள் பூங்குழலி. அதன்பிறகு வந்திய தேவன் பழையாறைக்கு சென்று நடந்த எல்லாவற்றையும் சொல்கிறான். இலங்கையில் ஒரு ஊமை பெண்ணை சந்தித்ததாகவும், அவள் பார்ப்பதற்கு நந்தினி மாதிரியே இருந்ததாகவும் கூறுகிறான். அதன்பின், குந்தவை ஆதித்த கரிகாலனை சம்புவரையர் அரண்மனைக்கு வரவிடாமல் தடுக்குமாறு வந்திய தேவனிடம் கூறி காஞ்சி அனுப்பி வைக்கிறாள்.
ஆனால் எல்லாவற்றையும் மீறி சம்புவரையர் அரண்மனைக்கு வருகிறார். அங்கு வந்து ராஜ்ஜியத்தை என் சிற்றப்பன் மதுராந்தகனே எடுத்துக் கொள்ளட்டும் என்று சொல்கிறார் ஆதித்த கரிகாலன். இந்த பேச்சுவார்த்தையெல்லாம் முடிந்து பெரிய பழுவேட்டரையர் தஞ்சைக்கு திரும்புக்கொண்டிருக்க, அலைச்சிற்றம் ஏற்பட்டு படகு கவிழ்ந்து எங்கையோ கரை சேருகிறார். அப்போது திடீரென துர்க்கா தேவி அவருடைய கனவில் வந்து நந்தினியின் தீய எண்ணத்தை சொல்ல, உடனே எல்லாவற்றை அறிந்துக் கொள்கிறான். அதே நேரத்தில் பாண்டியர்களோட ஒற்றர்கள் பேசியதையும் கேட்டுக்கொள்கிறார். இதனால் ஆத்திரத்தில் நந்தினியை கொலை செய்துவிட வேண்டும் என்று அங்கிருந்து கிளம்புகிறார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…