Sun ,Jun 11, 2023

சென்செக்ஸ் 62,547.11
118.57sensex(0.19%)
நிஃப்டி18,534.10
46.35sensex(0.25%)
USD
81.57
Exclusive

ஆதித்த கரிகாலனை கொன்றது யார்..? 

Nandhinipriya Ganeshan September 30, 2022 & 08:00 [IST]
ஆதித்த கரிகாலனை கொன்றது யார்..? Representative Image.

பொன்னியின் செல்வன் முழுக் கதை - 7..

இதற்கிடையில், சுந்தர சோழனை பார்த்து பாண்டிய நாட்டு ஒற்றன் ஒருவன் ஈட்டியை எறிய, அதை தன் நெஞ்சில் வாங்கிக்கொள்கிறாள் ஊமைப் பெண். அப்போது, வாழ்க்கையில் எந்த தீங்கையும் செய்யாத மந்தாகினி அருள்மொழி வர்மனோட நெற்றியில் முத்தமிட்டு இறந்துவிடுகிறாள். அப்போது கடம்பூர் மாளிகையில் நந்தினியை சந்தித்த வந்திய தேவன், ஆதித்த கரிகாலன் உங்களுடைய சகோதரன் என்ற உண்மையையும் அவர் அவளுடைய அம்மா மந்தாகினியை பார்த்த உண்மையையும் சொல்ல, நந்தினி கண்கலங்குகிறாள். அப்போது ஆதித்த கரிகாலன் அந்த அறைக்குள்ளே வந்துவிடுகிறான். 

ஆதித்த கரிகாலனை கொன்றது யார்..? Representative Image

உடனே நந்தினியின் தீய எண்ணம் பற்றி தான் தெரிந்துக்கொண்ட அனைத்தையும் ஆதித்த கரிகாலன் நந்தினியிடம் சொல்ல அவளும் ஒப்புக்கொள்கிறாள். ஆனால், உங்களை கொல்ல முடியாது என்று கண்கலங்குகிறாள். உடனே அந்த அறைக்குள் விளக்கு அணைந்துவிடுகிறது அப்போது திடீரென ஒரு சத்தம் வெளிச்சம் வந்தது பார்த்தால் ஆதித்த கரிகாலன் இறந்துக்கிடக்கிறார். பின் அவரை நான் தான் கொன்றதாக பழுவேட்டரையர் பொய்யாக ஒப்புக்கொண்டு தன்னையே அழித்துக்கொள்கிறார். 

ஆதித்த கரிகாலனை கொன்றது யார்..? Representative Image

ஆனால், உண்மையில் நந்தினி வீரபாண்டியனின் மகளே.. வீரபாண்டியன் தான் இவளுடைய தந்தை. உண்மையில் நந்தினியும் மதுராந்தகனுமே உடன்பிறந்த அண்ணன் தங்கை.. செம்பியன் மாதேவியின் உண்மையான மகன் சேந்தனமுதன் தான். அதன்பிறகு என்ன நடந்தது, அருள்மொழி வர்மன் எப்படி அரசன் ஆனார், வந்திய தேவனும் குந்தவையும் திருமணம் செய்துக் கொண்டார்களா? உண்மையில் ஆதித்த கரிகாலனை கொன்றது யார்? கடைசியாக கதையின் வில்லி நந்தினி என்ன ஆனாள்? எல்லாவற்றையும் இரண்டாவது பாகத்தை பார்த்து தெரிந்துக் கொள்வோம்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்