Thu ,Mar 28, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

வீரபாண்டியனின் மகள் தான் நந்தினி..? எந்த அளவிற்கு உண்மை...

Gowthami Subramani September 29, 2022 & 22:00 [IST]
வீரபாண்டியனின் மகள் தான் நந்தினி..? எந்த அளவிற்கு உண்மை...Representative Image.

வரலாறும், கற்பனையும் கலந்த பொன்னியின் செல்வன் புதினத்தைப் பற்றித் தெரிந்து கொள்வதற்கு பெரும்பாலானோர் ஆவலுடன் உள்ளனர். கல்கியின் வரலாற்றுப் படைப்பாக விளங்கும் இந்தப் புதினத்தின் பெயரைக் கேள்விப்படாதோர் எவரும் இலர். சோழர்களின் வரலாற்றைப் பறைசாற்றும் பொன்னியின் செல்வன் முழுக்கதையையும் படித்தவர்களுக்கும், கேட்டவர்களுக்கும், கேள்விப்பட்டவர்களுக்கும் மனதில் எழும் கேள்வி நந்தினி- வீர பாண்டியன் உறவுமுறையைப் பற்றித் தான். நந்தினி, வீரபாண்டியனுக்கு மனைவியா..? இல்லை மகளா..?

வீரபாண்டியனின் மகள் தான் நந்தினி..? எந்த அளவிற்கு உண்மை...Representative Image

நந்தினி வீரபாண்டியனுக்கு காதலி என்பதற்கும் எப்படி ஒரு சில கூற்றுகள் இருந்தனவோ, அதே போல நந்தினி வீரபாண்டியனுக்கு மகள் என்பதற்கும் சான்று இருக்கின்றன.

இதில் முக்கியமாக, வந்தியத் தேவன், ஆழ்வார்க்கணியார், பெரிய பழுவேட்டையர், பைத்தியக் காரர் என கூறப்படும் கருத்துருமன் இவர்களின் வசனத்தை வைத்து, வீரபாண்டியனின் மகள் என்பதும் கூறப்படும்.

முதலில் வீரபாண்டியனின் மகள் தான் நந்தினி என கதை படி பெரிய பழுவேட்டையன் கூறுவான். அதன் பின்னரே, வந்தியத் தேவன் மற்ற இடங்களிலும் அவ்வாறு கூறியிருப்பான்.

வீரபாண்டியனின் மகள் தான் நந்தினி..? எந்த அளவிற்கு உண்மை...Representative Image

கதையின் கடைசியில் பெரிய பழுவேட்டரையர் கூறுவது, “மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் நாம் எந்தப் பெண்ணின் முகலாவண்யத்தைக் கண்டு மயங்கி மோக வலையில் வீழ்ந்து அவளை என் அரண்மனையில் சர்வாதிகாரியாக்கி வைத்திருந்தேனோ, அவள் வீரபாண்டியனுடைய மகள்.!. இதை அவளே ஆதித்த கரிகாலரிடம் கூறியதை நான் என் காதால் கேட்டேன். வீரபாண்டியனை ஆதித்த கரிகாலர் கொன்றதற்குப் பழிக்குப் பழி வாங்கவே பழுவூர் அரண்மனைக்கு அவள் வந்திருந்தாள். அதற்குத் தான் சமயம் பார்த்துக் கொண்டிருந்தாள்.” என்று கூறினான்.

வீரபாண்டியனின் மகள் தான் நந்தினி..? எந்த அளவிற்கு உண்மை...Representative Image

இன்னொரு உதாரணமாக, வந்தியத் தேவன் குந்தவையிடம் கூறுவது.. “நந்தினி வீர பாண்டியனின் மகள் என்பது உண்மையாயிருக்குமோ?” என்று குந்தவை வந்தியத் தேவனிடம் கேட்கிறாள். இதற்கு வந்தியத் தேவன், “நந்தினி அவ்வாறு ஆதித்த கரிகாலனிடம் கூறியதனை என் காதினில் கேட்டேன் என பெரிய பழுவேட்டையரும் கேட்டார்.” என வந்தியத் தேவன் கூறியிருப்பான்.

இதில், கதையின் படி நந்தினி மிக மெதுவான குரலிலேயே ஆதித்த கரிகாலனிடம் கூறியிருப்பாள். இதை வந்தியத் தேவன் கேட்காத போதிலும், அதனைப் புரிந்து கொள்வான்.

வீரபாண்டியனின் மகள் தான் நந்தினி..? எந்த அளவிற்கு உண்மை...Representative Image

பழுவேட்டையரின் மனதில் இருப்பதைப் பற்றியும் நாம் சிந்திக்க வேண்டும். ஏனெனில், ரவிதாசன் தனது கூட்டாளியிடம் பேசிய, “பழுவூர் ராணியா அவள்? பாண்டிமா தேவி என்று சொல். வீர பாண்டியர் இறப்பதற்கு இரு தினங்களுக்கு முன், அவளைத் தம் பட்டத்து மகிஷியாக்கிக் கொண்டதை மறந்து விட்டாயா?... வீர பாண்டியர் மரணத்துக்குப் பழிக்குப் பழி வாங்க அவள் சபதம் செய்திருப்பதை மறந்து விட்டாயா?..” என்பதை பழுவேட்டையன் கேட்டிருப்பான். அதன் படி, இந்த இடத்தில் வீர பாண்டியனின் மனைவி நந்தினி என நினைத்திருப்பாள்.

வீரபாண்டியனின் மகள் தான் நந்தினி..? எந்த அளவிற்கு உண்மை...Representative Image

அதே போல, குந்தவை சுந்தர சோழரின் மகள் நந்தினி எனக் கூறுவாள். அதன் படி, இவரைப் பொறுத்த வரை, சுந்தர சோழரின் மகளும் நந்தினி எனவும், வீர பாண்டியனின் மனைவியும் நந்தினி எனவும் நினைத்துக் கொண்டிருப்பாள். இருந்தபோதிலும், நந்தினி அவள் வாயால் கூறியதை பெரிய பழுவேட்டையரின் காதில் விழுந்ததால் தான் நந்தினி வீரபாண்டியனின் மகள் என கூறியிருப்பார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்