Sun ,Dec 10, 2023

சென்செக்ஸ் 69,825.60
303.91sensex(0.44%)
நிஃப்டி20,969.40
68.25sensex(0.33%)
USD
81.57
Exclusive

அடி தூள்.. பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் முன்கூட்டியே ரிலீஸ்? எப்போ தெரியுமா?

Sekar November 13, 2022 & 12:48 [IST]
அடி தூள்.. பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் முன்கூட்டியே ரிலீஸ்? எப்போ தெரியுமா?Representative Image.

தமிழ் சினிமாவின் பிரமாண்ட படங்களில் ஒன்றான பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் மிகப்பெரும் வெற்றியை பெற்றுள்ள நிலையில், படத்தின் இரண்டாம் பாகத்தை திட்டமிட்ட தேதிக்கு முன்பாக, முன்கூட்டியே வெளியிட முடிவு செய்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை தழுவி பொன்னியின் செல்வன் படத்தை இரண்டு மணிரத்னம் இயக்கியுள்ளார். இதில் நடிகர்கள் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஜெயராம், ரகுராம், பிரகாஷ்ராஜ், பார்த்திபன், சரத்குமார், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.

இந்த படத்தின் முதல் பாகம் கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாகி தற்போதும் பல இடங்களில் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. படத்தின் முதல் பாகம் எடுக்கப்பட்டபோதே, இரண்டாம் பாகத்திற்கான காட்சிகளும் படமாக்கப்பட்டுள்ளது. 2 பாகங்களும் சுமார் ரூ.500 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுவதாக கூறப்பட்டது. 

இந்நிலையில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் மட்டும் ரூ.500 கோடி வரை தியேட்டர்களில் வசூல் செய்த நிலையில், டிஜிட்டல் ரைட்ஸ் மட்டும் 125 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதனால் படத்தை தயாரித்த லைகா நிறுவனம் போட்ட பணம் அனைத்தையும் முதல் பாகத்திலேயே எடுத்ததோடு, லாபத்தையும் பார்த்துவிட்டனர். இதற்கிடையே 2 ஆம் பாகம் முதல் பாகத்தை தாண்டி அதிக அளவில் வசூல் சாதனை புரியும் என்று எதிர்பார்க்கப்படுவதால், தயாரிப்பு நிறுவனம் மகிழ்ச்சியில் உள்ளது.

இந்நிலையில், தற்போது பொன்னியின் செல்வன் 2 ஆம் பாகத்திற்கான கிராபிக்ஸ் வேலைகள், டப்பிங் மற்றும் ரீகார்டிங் போன்ற தொழில்நுட்ப பணிகள் மும்பை மற்றும் சென்னையில் உள்ள ஸ்டூடியோக்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

படத்தை அடுத்த வருடம் ஆகஸ்ட் மாதம் திரைக்கு கொண்டுவர திட்டமிட்டிருந்த நிலையில், பணிகள் வேகப்படுத்தப்பட்டுள்ளதால், அதற்கு ஓரிரு மாதங்களுக்கு முன்பாகவே படம் வெளியாகும் என படக்குழுவினர் வட்டாரங்களில் இருந்து தகவல் கசிந்துள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்