Fri ,Dec 08, 2023

சென்செக்ஸ் 69,825.60
303.91sensex(0.44%)
நிஃப்டி20,969.40
68.25sensex(0.33%)
USD
81.57
Exclusive

கானா பாட்டு, தனி ஆல்பம்...பிஸியான கப்பீஸ்...14 வயதில் புது கார் வாங்கி மிரட்டியுள்ளார்!

Priyanka Hochumin October 12, 2022 & 10:58 [IST]
கானா பாட்டு, தனி ஆல்பம்...பிஸியான கப்பீஸ்...14 வயதில் புது கார் வாங்கி மிரட்டியுள்ளார்!Representative Image.

விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலாமான இளம் கானா பாடகர் பூவையார் மக்களிடைய பெரும் ஆதரவை பெற்றுள்ளார். அந்த நிகழ்ச்சியில் எந்தவித பயமும் இன்றி சாமர்த்தியமான பேச்சாலும், மக்களை ஈர்க்கும் பாட்டாலும் சினிமா துறையில் அடுத்தடுத்த உச்சத்திற்கு சென்றார். அவர் தன்னுடைய முதல் பாடலே தளபதி விஜய்யின் பீகிள் படத்தில் பாடி, அதில் நடித்தும் உள்ளார். அடுத்த படம் மாஸ்டரில் விஜய் அவர்களுடன் அதிக காட்சியில் நடித்துள்ளார்.

இப்படி இவரின் வளர்ச்சியை பற்றி சொல்லி கொண்டே போகலாம். மேலும் சினிமா பாடல்கள், கச்சேரி, ஆல்பம் சாங்ஸ் என்று மெகா பிஸியாக உலா வந்து கொண்டிருக்கிறார் பூவையார் என்னும் கப்பீஸ். அப்படியாக 14 வயதான பூவையார் சொந்த கார் வாங்கி அத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. அதில் " நீங்க இல்லைனா நான் இல்ல, உங்களுடைய ஆசிர்வாதம் எனக்கு எப்பையுமே இருக்கனும் Thanks to all  & thanks to god" என்று தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார். பொது மக்கள் இவரின் வளர்ச்சியை கண்டு தங்களின் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.