Mon ,Feb 26, 2024

சென்செக்ஸ் 72,890.88
-251.92sensex(-0.34%)
நிஃப்டி22,145.85
-66.85sensex(-0.30%)
USD
81.57
Exclusive

prince release date பிரின்ஸ் தீபாவளிக்கு தள்ளிப் போனதுக்கு இதுதான் காரணமாம்! எப்படியெல்லாம் யோசிக்கிறாங்கப்பா

UDHAYA KUMAR June 22, 2022 & 18:06 [IST]
prince release date பிரின்ஸ் தீபாவளிக்கு தள்ளிப் போனதுக்கு இதுதான் காரணமாம்! எப்படியெல்லாம் யோசிக்கிறாங்கப்பாRepresentative Image.

சிவகார்த்திகேயன் நடிப்பில் டான் திரைப்படம் வசூல் ரீதியாக பயங்கர ஹிட் ஆன நிலையில், அவரின் அடுத்த படத்தின் மீது மிகப் பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதனைத் தொடர்ந்து தன்னை லைம் லைட்டிலேயே வைத்திருக்க ரஜினியை சந்திப்பது, விஜய்யை சந்திப்பது என சிவகார்த்திகேயனும் கோலிவுட் அரசியலை கையிலெடுத்துள்ளார். 

சிவகார்த்திகேயன் அடுத்து அனுதீப் இயக்கத்தில் பிரின்ஸ் திரைப்படத்தில் நடித்துள்ளார். அனுதீப் தெலுங்கில் மிகப் பெரிய ஹிட் படத்தை கொடுத்த இயக்குநர். அவரது இயக்கத்தில் அயல்நாட்டு ஹீரோயினுடன் ஜோடியாக சிவகார்த்திகேயன் நடித்துள்ள படமான பிரின்ஸ் முதலில் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. விநாயகர் சதுர்த்தி தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 31ம் தேதி வெளியாக திட்டமிட்டிருந்த இந்த படத்தை திடீரென்று தீபாவளிக்கு கொண்டு சென்றுள்ளனர். 

பிரின்ஸ் திரைப்படம் கிட்டத்தட்ட 2 மாதங்கள் தாண்டுவதற்கு என்ன காரணமாக இருக்கும். படம் முழுவதும் முடிந்துவிட்ட நிலையில், இத்தனை தாமதம் ஏன் என பலரும் தங்கள் சந்தேகங்களை எழுப்பி வந்தனர். இந்நிலையில் அதற்கான பதில் கிடைத்துள்ளது. 

சிவகார்த்திகேயனுக்கு முதலில் தனது படம் விஜய், அஜித் போல தீபாவளிக்கு ரிலீஸ் ஆக வேண்டும் என்பது கனவாம். அதற்கு ஏற்றாற் போல விஜய் படம் இந்த வருடம் இறங்கவில்லை. மேலும் அஜித் படமும் தாமதமாகி அடுத்த வருடத்துக்கு தாவுகிறது. இதுதான் சரியான வாய்ப்பு என நினைத்து தீபாவளிக்கு தள்ளி வைத்துள்ளார் சிவகார்த்திகேயன். 

மேலும் முன்னதாக விநாயகர் சதுர்த்தி தினத்தில் வெளியான சீமராஜா திரைப்படம் சரியாக போகவில்லை என்பதால் இந்த திரைப்படத்தை மாற்றியுள்ளனர் எனவும் தகவல் வெளியாகியிருந்தது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்