Thu ,Mar 28, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

ராங்கி படம் எப்படி இருக்கு? திரைவிமர்சனம்!

UDHAYA KUMAR Updated:
ராங்கி படம் எப்படி இருக்கு? திரைவிமர்சனம்!Representative Image.

திரிஷா நடிப்பில் இயக்குநர் எம்.சரவணன் இயக்கி இன்று  Dec 30, 2022 தேதி வெளிவந்த   ராங்கி படம் எப்படி இருக்கு?  Lyca Productions நிறுவனம் சார்பில்  தொடங்கப்பட்ட இந்த படத்தில் Trisha கதாநாயகியாக நடித்திருக்கிறார். 

ராங்கி ஓடிடி ரிலீஸ் தேதி, ஓடிடி தளம் வெளியீட்டு நேரம் மற்றும் பல தகவல்கள்

Raangi Trailer

--------------------------------------------------------------------

Raangi OTT Release Date & Digital Streaming Rights

Cast & Crew

Movie :    Raangi (2022)
Genre :Family  / Drama
Language :    Tamil
Release Date :     Dec 30, 2022
Director :    M Saravanan
Producer :     Allirajah Subaskaran
Screenplay :    M Saravanan
Story    : M Saravanan
Cast    : Trisha
Music    : C Sathya
DOP    : K. A. Sakthivel 
Editor    : M Subarak
Production Company : Lyca Productions

கதைச் சுருக்கம் 

துணிவான ஊடகவியலாளராக திரிஷா நேர்மையாக நடித்திருக்கிறார்.  உறுதியோடு அநியாயங்களைத் தட்டிக் கேட்கும் பத்திரிகையாளர் அவர். 

சர்வதேச தீவிரவாதி ஒருத்தனுடன் பெண் ஒருவர் இணையத்தில் பேசுகிறார். அவருக்கு தான் பேசிக்கொண்டிருக்கும் நபர் ஒரு தீவிரவாதி என்பது தெரியாது. ஆனால் அவளோ திரிஷாவின் அண்ணன் மகளின் புகைப்படத்தையும் சில தகவல்களையும் வைத்தே பேசுகிறாள். 

இதனால் பிரச்னை ஏற்படும்போது திரிஷாவின் குடும்பம் சிக்கவைக்கப்படுகிறது. இதுகுறித்து திரிஷாவுக்கு தெரியவர,  அவரும் அந்த பையனுடன் பேச, ஒரு வித ஈர்ப்பில் மயங்குகிறார்.  அவனை யார் எனத் தேடும் திரிஷாவுக்கு இதற்குள் மிகப்பெரிய விசயம் இருப்பது புரிய வருகிறது. இதை தான் வேலை பார்க்கும் தொலைக்காட்சியில் அம்பலப்படுத்துகிறார். அந்த விசயத்தில் சம்பந்தப்பட்ட அரசியல்வாதி கொலையால், திரிஷாவுக்கு நெருக்கடி ஏற்படுகிறது. காவலர்கள் சுற்றி வளைக்கவே, இதிலிருந்து தப்பிக்க என்ன செய்வது என அறியாது திகைத்து நிற்கிறார். 

காவல்துறையினருடன் இணைந்து தன் அண்ணன் மகளையும் அழைத்துக் கொண்டு தான் பேசிய அந்த பையனைப் பிடிக்க அவர்கள் நாட்டுக்கே செல்கிறார்கள்.  இதன் முடிவில் நமக்கு ஒரு டிவிஸ்ட்டும் காத்திருக்கிறது. 

ராங்கி படம் எப்படி இருக்கு? திரைவிமர்சனம்!Representative Image

விமர்சனம்

சரவணன் தான் யார் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார். காலதாமதமாகி வெளியானதால் சில நெருடல்கள் இருக்கத்தான் செய்கிறது என்றாலும் படம் ஓவர் ஆலாக ஓகே ரகம்தான். 

சஸ்பென்ஸ் குறையாமல் திரிஷாவின் உழைப்பையும் வீணாக்காமல் நன்றாக செதுக்கியிருக்கிறார் இயக்குநர். வசனங்களிலும், கதையை நகர்த்திக் கொண்டு போகும் விதத்திலும் சிறப்பாக கையாண்டிருக்கிறார். 

பின்னணி இசையில் சத்யா ஒரு படி மேலே சென்றிருக்கிறார். கோலிவுட்டில் ஒரு ரவுண்ட் வருவார் என்றே எண்ணத் தோன்றுகிறது. 

கேமரா கே ஏ சக்திவேல், திரிஷாவை அவ்வளவு அழகாக காட்டியிருக்கிறார்.  

திரிஷா மொத்த படத்தையும் தனது தோளில் சுமந்து நிற்கிறார். ஆலிம் திரிஷாவுக்கு அவ்வப்போது வந்து சப்போர்ட் செய்கிறார். பரபரப்பான திரைக்கதையைப் பார்க்க விரும்புபவர்களுக்கு மிகச் சிறந்த படமாக இது அமையும். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்