Raja Rani 2 Today Episode: வெற்றிகரமாக போலீஸ் ட்ரெயினிங்காக சென்னை சென்றுள்ளனர் சந்தியா, சரவணன். தன்னுடைய மருமகள் இவ்ளோ பெரிய இடத்தில் இருக்கிறதை நினைத்து பூரித்து போறாங்க மாமனாரும், மாமியாரும்.
அப்படி இருக்கும் போது அர்ச்சனாக்கு குழந்தை புறந்துடுச்சுன்னு சரவணனுக்கு போன் வருது. இது தெரிஞ்சதும் நாலு பேரும் ரொம்ப சந்தோஷப்படுறாங்க. நம்ப குடும்பத்துல அடுத்து அடுத்து நல்ல விஷயங்களா நடக்குறது பாத்து சிவகாமி ரொம்ப ஆனந்தமா இருக்காங்க. இருந்தாலும் இப்படி யாருமே இல்லாம இவ்ளோ தூரத்துல வந்து சந்தியா தனியா இருக்க போறத நினைச்சு உள்ளுக்குள்ள அவங்களுக்கு ஒரு பயம். மறுபக்கம் சந்தியா போலீஸ் ஆனதுக்கு அப்புறம் எங்க சரவணன மதிக்காம போய்டுவாங்களோனு ரொம்ப பயம் அவங்களுக்கு.
அங்க ஹாஸ்பிடல்ல குழந்தை பொறந்துடுச்சுன்னு அர்ச்சனா ரொம்ப ஆசையோட குழந்தையை பாக்குறாள். பாத்த உடனே தேம்பி தேம்பி அழுக ஆரம்பிச்சிடுறாள். ஏன்னா? அவளுக்கு பிறந்தது பெண் குழந்தையாம். ஆம்பள புள்ள இல்லைன்னு மேடம்கு ரொம்ப வருத்தம். இப்ப வீட்ல நம்மல யாரும் மதிக்க மாட்டாங்க என்ன பன்னலாம்னு அழுதுகிட்டே யோசிக்கிறாள். பக்கத்துலயே அவங்களுக்கு தெரிஞ்சவங்களுக்கு ஆண் குழந்தை பொறந்திருக்கு. அவங்க இன்னும் அவங்களோட குழந்தைய பாக்கவே இல்ல. இந்த அர்ச்சனா உடனே அவளுக்கு பிறந்த பெண் குழந்தையை மாத்தி அவங்களுக்கு பிறந்த ஆண் குழந்தைய தூக்கிட்டு வந்துடுறா. நல்ல வேள யாரும் பாக்கலைனு நிம்மதியா இருக்கிறாள்.
நாளை நடக்க போவது குழந்தைய பாக்க வந்த செந்தில் என்னடி அர்ச்சனா குழந்தை உன்ன மாறியும் இல்ல, என்ன மாறியும் இல்லைனு கேக்குறான். பயத்துல என்ன சொல்றதுன்னு தெரியாம நிக்கிறா அர்ச்சனா. என்ன தான் விஞ்ஞானமும் அறிவியலும் வளந்தாலும் இன்னமும் இந்த கால கட்டத்தில் ஆண் வாரிசு நால தான் மரியாதைனு நினைக்கிறது ரொம்ப கொடுமையா இருக்கு.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…