Thu ,Nov 30, 2023

சென்செக்ஸ் 66,771.36
-130.55sensex(-0.20%)
நிஃப்டி20,069.35
-27.25sensex(-0.14%)
USD
81.57
Exclusive

மீண்டும் ரஜினியுடன் இணைந்த புயல்...! வேற லெவல் அப்டேட்...!

UDHAYA KUMAR November 03, 2022 & 17:10 [IST]
மீண்டும் ரஜினியுடன் இணைந்த புயல்...! வேற லெவல் அப்டேட்...!Representative Image.

ரஜினிகாந்துடன் இணைந்து வடிவேலு புதிய படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழ் சினிமாவின் நட்சத்திர நடிகர்களில் ஒருவரான ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். இந்த படத்துக்கு ஜெய்லர் என பெயர் வைத்துள்ளனர். சில மாதங்களுக்கு முன் இந்த அறிவிப்பு வெளியாகி, தற்போது பாதிக்கும் மேல் படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டது. 

இந்த படத்தைத் தொடர்ந்து ரஜினி அடுத்த படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். லைகா தயாரிக்கும் அந்த படத்தை டான் திரைப்படத்தை இயக்கிய சிபி சக்ரவர்த்தி இயக்குவார் என கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த படம் குறித்து மேலும் சில தகவல்கள் தெரியவந்துள்ளன. 

முழுக்க முழுக்க காமெடித் திரைப்படமாக அமைகிறது டான் இயக்குநரின் புதிய படம். இந்த படத்தில் ரஜினி வேற லெவலுக்கு காமெடி காட்சிகளில் நடிக்கவிருக்கிறாராம். செந்தில், ஜனகராஜுடன் சேர்ந்து பல படங்களில் காமெடியில் கலக்கியுள்ளார் ரஜினிகாந்த். இந்நிலையில், இப்போது வடிவேலுவுடன் மீண்டும் இணைகிறார் ரஜினிகாந்த்.

சந்திரமுகி, குசேலன் ஆகிய திரைப்படங்களில் ரஜினியுடன் சேர்ந்து நடித்துள்ளார் வடிவேலு. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்