தமிழ் திரையுலகின் லெஜண்ட்ரி நடிகர்கள் கமல்ஹாசனும், ரஜினிகாந்தும் மாறி மாறி அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமாகி வருகின்றனர். கமல்ஹாசனுக்கு இந்தியன் 2, மகேஷ் நாராயணன், பா ரஞ்சித், வெற்றி மாறன், கௌதம் வாசுதேவ் மேனன் படங்கள் அடுத்தடுத்த லைன்-அப்பாக இருக்க, ரஜினிகாந்தும் அடுத்து 2 படங்களை ஒப்பந்தம் செய்துள்ளாராம்.
லைகா தயாரிப்பில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 திரைப்படம் மீண்டும் துவங்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்று வருகின்றது. விரைவில் படப்பிடிப்பை முடித்துக் கொண்டு போஸ்ட் புரடொக்ஷன் பணிகளைக் கவனிக்க ஷங்கர் முடிவு செய்துள்ளார். இந்நிலையில், அடுத்து ரஜினிகாந்தை வைத்து படமெடுக்க லைகா முடிவு செய்துள்ளது.
லைகா நிறுவனம், ரஜினியுடன் அடுத்தடுத்து 2 படங்களைத் தயாரிப்பதற்கான ஒப்பந்தத்தைப் போட்டுள்ளது. முதல் படம் டான் பட இயக்குநர் சிபி சக்ரவர்த்தியுடனும், இரண்டாவது படம் மிகப் பிரம்மாண்டமாக உருவாகும் எனவும் அதை தேசிங்கு பெரியசாமி இயக்குகிறார் எனவும் கூறப்படுகிறது.
ரஜினிகாந்துக்கு உடல் ஒத்துழைத்தால் இந்த இரண்டு படங்களுக்குப் பிறகு நடிப்பதைப் பற்றி யோசிப்பார் எனவும், அநேகமாக இவை இரண்டும்தான் இவரின் கடைசி படமாக அமையும் எனவும் பலரும் பேசிக்கொள்கிறார்கள். முதுமை காலத்திலும் இளமையாக இருக்கும் ரஜினிகாந்த், பேரக்குழந்தைகளுடன் தனது முதுமை காலத்தை கழிக்க விரும்புகிறார் என்றும் கூறுகிறார்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…