Sat ,Apr 20, 2024

சென்செக்ஸ் 73,088.33
599.34sensex(0.83%)
நிஃப்டி22,147.00
151.15sensex(0.69%)
USD
81.57
Exclusive

ரஜினிகாந்தின் 7 அழகிய கதாநாயகிகள்...!

UDHAYA KUMAR Updated:
ரஜினிகாந்தின் 7 அழகிய கதாநாயகிகள்...! Representative Image.


சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா சின்ன குழந்தைங்க சொல்லும்... கண்ணே.. ! உண்மைதான் பொதுவாக திரை நட்சத்திரங்களில் மிகப் பெரிய இடத்தைப் பிடித்த அனைவரையுமே சூப்பர் ஸ்டார் என்றே அழைப்பது வழக்கம். ஆனாலும் சூப்பர் ஸ்டார் என யார் சொன்னாலும் நம் மனது ரஜினிகாந்த் அவர்களையே நினைக்கிறது. காரணம் அந்த பெயருக்கும் ரஜினியின் புகழுக்கும் இருக்கும் பிணைப்பு அப்படி. 

கமல்ஹாசன் நடித்த அபூர்வராகங்கள் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க பலரையும் தேடிக் கொண்டிருந்தார் கே பாலச்சந்தர். அப்போது திரைக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த ரஜினிகாந்தின் பெயர் இயக்குநருக்கு பரிந்துரைக்கப்படுகிறது. 10க்கும் அதிகமான பரிந்துரை பெயர்களிலிருந்து ஒருவரைத் தேர்ந்தெடுக்கிறார் பாலச்சந்தர். சிகரெட்டைத் தூக்கி போட்டு பிடித்து அவர் சான்ஸ் வாங்கியதாக கூறுவார்கள். எனக்கு என்னவோ பாலச்சந்தருக்கு ரஜினியிடம் பிடித்தது அவரின் தலைமுடியும் அடுத்த வீட்டு பையன் போல எளிமையாக இருந்த அப்பாவி முகமும்தான் என தோன்றுகிறது. 

சிவாஜி ராவ் - ரஜினிகாந்தாக மாறுகிறார். அதன் பின்னர் அவரது வாழ்க்கையில் பல்வேறு விசயங்கள் ஏற்றமாகவும் சில இறக்கங்களும் இருந்தாலும் அவரின் திரை வாழ்க்கையில் அவருக்கு கிடைத்த வாய்ப்புகளை கச்சிதமாக பயன்படுத்திக் கொண்டார். 

என்னதான் அவரது ஸ்டைல், நடிப்பு, வசன உச்சரிப்பு என அனைத்தும் திரை வாழ்க்கையில் முன்னேற்றத்தை கொடுத்ததுதான் என்றாலும் அவருக்கு இணையாக நடிப்பில் கெத்து காட்டிய கதாநாயகிகளும் முக்கியமானவர்கள். 

ரஜினிகாந்த் ஜோடியாக நடிப்பில் அசத்திய அந்த 7 முக்கிய நாயகிகளை இப்போது பார்க்கலாம். 

ரஜினிகாந்த் - ஸ்ரீதேவி | Rajinikanth-Sridevi

For dear friend Sridevi, Rajinikanth and wife Latha break 37-year custom

மூன்று முடிச்சு, பிரியா, நான் அடிமை இல்லை, ஜானி என பல படங்களில் இந்த இணை நடித்துள்ளது. இதுபோக கமல்ஹாசனுடன் சேர்ந்து ரஜினி நடித்த சில படங்களிலும் ஸ்ரீதேவி நடித்திருக்கிறார். 

மூன்று முடிச்சு படத்தில் படகில் ரஜினி கமல்ஹாசனை தள்ளி விட்டு கொலை செய்யும்போது அவரின் முகத்தில் ஒரு வெறி தெரியும். ஸ்ரீதேவி பயம் கலந்து பரிதவிப்பில் ஒரு பாவனை செய்வார். இப்படி இந்த படத்தின் வெற்றிக்கு இதுவும் ஒரு விளம்பரமாக ஆக்கப்பட்டது. இந்த காலத்து இளைஞர்களுக்கு ஆரம்ப கால கமல், ரஜினி படங்களில் எது நினைவுக்கு இருக்குமென்றால் சட்டென இதுதான் நினைவுக்கு வரும். 

ரஜினிகாந்த் - ஸ்ரீப்ரியா | Rajinikanth-Sripriya

Rajinikanth Fans on Twitter: "#Superstar #Rajinikanth with #Sripriya -  Question : Can you list all Rajini-Sripriya combo movies ???  http://t.co/LIOt5cDkdb" / Twitter

ரஜினி முதன்முதலில் கதாநாயகனாக அறிமுகமாகும்போது அவருக்கு ஜோடியாக நடித்தது ஸ்ரீப்ரியாதான். பில்லா, பொல்லாதவன் படங்களில் நடித்து இந்த இணை ரசிகர்களின் விருப்பமான ஜோடியாக மாறியது. இந்த அனைத்து படங்களிலும் ஸ்ரீப்ரியாவின் நடிப்பும் அந்த படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. 

ரஜினிகாந்த் - ராதிகா | Rajinikanth-Radhika

Nallavanuku Nallavan'

ஊர்க்காவலன், போக்கிரி ராஜா, நல்லவனுக்கு நல்லவன், நான் மகான் அல்ல உள்ளிட்ட படங்களில் மிகச் சிறந்த இணையாக இந்த இணை போற்றப்பட்டது. ரஜினிக்கு சிறந்த ஜோடி எது என பலரிடம் கேட்டால் ஸ்ரீதேவிக்கு பிறகு நிச்சயமாக ராதிகாவையே கூறுவார்கள். 

ரஜினிகாந்த் - குஷ்பு | Rajinikanth-Khushboo

Is Tamil cinema's idea of a quintessential hero evolving with time? | The  News Minute

90 களுக்கு பிறகு மாஸ் ஹீரோவான ரஜினிகாந்துக்கு இணையாக நடித்த நடிகைகளில் முக்கியமானவர் குஷ்பு. மன்னன், அண்ணாமலை, பாண்டியன் என முக்கியமான படங்களில் அவருக்கு ஜோடியாக நடித்தார். அண்ணாமலை படத்தில் வரும் பாம்பு நகைச்சுவை காட்சி மிகவும் பிரபலம். கொண்டையில் தாழம்பூ பாடலிலும் குஷ்புவுக்கு அதிக ரசிகர்கள் உண்டானார்கள். 

ரஜினிகாந்த் - மீனா | Rajinikanth-Meena

Actor Meena joins cast of Rajinikanth's next project | The News Minute

ஒருபுறம் குஷ்பு என்றால் மறுபுறம் மீனா. 90களில் இந்த இருவரும்தான் ரஜினியின் ஆஸ்தான கதாநாயகிகளாக இருந்தார்கள். ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த ஜோடியும் ரஜினி - மீனா ஜோடிதான். முத்து, வீரா, எஜமான் உள்ளிட்ட படங்களில் நடித்து அடுத்தடுத்து ஹிட் ஆனதால் இந்த ஜோடிக்கு மக்கள் மத்தியில் மிகப் பெரிய பெயர் கிடைத்தது. 

ரஜினிகாந்த் - ஷ்ரேயா சரண் | Rajinikanth-Shriya Saran

Shriya Saran

சிவாஜி படத்தில் நடித்து ரஜினியின் சிறந்த ஜோடி என பெயர் பெற்ற நடிகை ஷ்ரேயா. சொல்லப்போனால் தான் நடித்த எல்லா நடிகர்களுடனும் சிறந்த ஜோடி என பேசப்பட்ட ஒரு நடிகை ஷ்ரேயா. வாஜி வாஜி, சஹானா உள்ளிட்ட பாடல்களின் வெற்றியே இவர்களின் ஜோடிக்கு சாட்சி. 

ரஜினிகாந்த் - ஐஸ்வர்யா ராய் |  Rajinikanth- Aishwarya Rai

Endhiran notes from UK - Endhiran | Rajinikanth | Aishwarya Rai | Shankar |  AR Rahman - Behindwoods.com

தமிழில் ஒரு சில படங்களே பணிபுரிந்த ஐஸ்வர்யா ராய் திருமணம் செய்துகொண்டு அமைதியாக இருந்தார். தமிழ் சினிமாவில் அவரை மீண்டும் கொண்டு வந்தது ரஜினிகாந்த் தான். அவரின் எந்திரன் படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு திரும்பி வந்தார் ஐஸ்வர்யா. 

இவர்கள் மட்டுமின்றி ஸ்ரீவித்யா, அமலா, ராதா, அம்பிகா, ஷோபனா, நயன்தாரா, சோனாக்ஷி சின்ஹா, அனுஷ்கா, த்ரிஷா, சிம்ரன் கூட ரஜினியுடன் ஜோடி சேர்ந்து நடித்திருக்கிறார்கள். 
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்