நடிகர் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா ஜோடியாக நடித்து கடந்த வருடம் வெளியான தெலுங்கு படம் "புஷ்பா". தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம் மொழிகளில் டப்பிங் செய்து வெளியிட்ட இப்படத்திற்கு உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்தது என்றே சொல்லலாம். பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடித்த இந்த படத்தில் சமந்தா ஆடிய 'ஊ சொல்றியா மாமா' குத்துப்பாடல் பட்டி தொட்டியெங்கும் பட்டையை கிளப்பியது. தற்போது இந்த பாட்டுக்கு இல்லாத ரசிகர்களே இல்லை.
புஷ்பா படத்துக்கு பிறகு அல்லு அர்ஜுன் இந்திய அளவில் பிரபலமாகிவிட்டார். இதனால், அவர் நடித்த மற்ற படங்களையும் அனைத்து மொழிகளும் டப்பிங் செய்து வெளியிடும் முயற்சிகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில், புஷ்பா முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது 'புஷ்பா 2' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சுகுமார் இயக்கும் இப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக மீண்டும் ராஷ்மிகா மந்தனா தான் நடித்துள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் பேனரில் நவீன் யார்னேனி மற்றும் ஒய் ரவிசங்கர் ஆகியோர் இந்தப் படத்தைத் தயாரிக்கின்றனர்.
தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படத்தில் ஃபஹத் ஃபாசில், அனசூயா, சுனில் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இதற்கிடையில், அல்லு அர்ஜுனின் பிறந்தநாளை முன்னிட்டு புஷ்பா 2 படத்தின் டீஸரை படக்குழு வெளியிட்டது. இந்த டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றதோடு, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், புஷ்பா 2 படத்தில் பாலிவுட் நடிகரான ரன்வீர் சிங் சிறப்பு வேடத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாகவும், கெமியோ ரோலில் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆனால் இது இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இருப்பினும், இந்த செய்தி உண்மையாக இருந்தால் புஷ்பா 2 படத்திற்கான எதிர்பார்ப்பு இருமடங்காக அதிகரிக்கும். அதேசமயம், புஷ்பா 2 படத்தின் ரிலீஸ் தேதி பற்றிய அறிவிப்பும் வெளியாகியுள்ளது. அதாவது, இந்த வருடம் டிசம்பர் 22 ஆம் தேதி வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…