Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

தமிழ், தெலுங்கு படங்கள் ஐட்டம் டான்ஸுக்குதான்... பாலிவுட்லதான் உண்மையான காதல்! - ரஷ்மிகா மந்தனா

UDHAYA KUMAR Updated:
தமிழ், தெலுங்கு படங்கள் ஐட்டம் டான்ஸுக்குதான்... பாலிவுட்லதான் உண்மையான காதல்! - ரஷ்மிகா மந்தனாRepresentative Image.

தெலுங்கு பட வாய்ப்பு கிடைத்த போது தனக்கு முகவரி தந்த கன்னட சினிமாக்களை தரக்குறைவாக விமர்சித்த ராஷ்மிகா இப்போதும் திருந்தவில்லை. தென்னிந்திய மொழி படங்கள் ஐட்டம் டான்ஸ் பாடல்களுக்கு மட்டும்தான் எனவும், பாலிவுட்டில் தான் சிறந்த தரமான காதல் பாடல்கள் வருவதாகவும் கூறி தமிழ், தெலுங்கு, கன்னட, மலையாள மொழித் திரைப்படங்களை கேவலப்படுத்தியிருக்கிறார் ராஷ்மிகா மந்தனா. 

தான் நடித்த முதல் காதல் பாடலே இதுதான் என மிஷன் மஜ்னு படத்தின் விழாவில் பேசியிருக்கிறார். இதனால் ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

மிஷன் மஜ்னு படத்தில் சித்தார்த் ஜோடியாக நடித்துள்ளார் ராஷ்மிகா. பாலிவுட்டில் தான் தான் எதிர்பார்த்த வகையிலான காதல் பாடல்கள் வருகின்றன என்கிறார். அதனைக் காண நான் ஆவலாக இருக்கிறேன். நீங்களும் கேட்டு பாருங்கள் என கூறியிருக்கிறார். 

ராஷ்மிகா தற்போது விஜய் நடிப்பில் வாரிசு பட இசை வெளியீட்டில் கலந்துகொண்டிருந்தார். அந்த விழாவில் தான் பிறந்ததிலிருந்தே விஜய் ரசிகை எனும் அளவுக்கு தளபதி விஜய்க்கு சோப்பு போட்டுக் கொண்டிருந்தார். இதே தெலுங்கு பட விழாக்களில் தெலுங்கு மாஸ் நடிகர்களின் ரசிகை நான் என பேசி அவர்களின் அடுத்த பட வாய்ப்புகளுக்காக தூண்டில் போட்டார். 

இதுவரை விஜய் தேவரகொண்டாவுடன் சுற்றிக் கொண்டிருந்த ராஷ்மிகா சமீப காலமாக பாலிவுட் நடிகர்கள் சிலருடன் டேட்டிங் செல்வதாக அரசல் புரசலாக பேசப்பட்டு வருகிறது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்