பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழகம் முழுக்க புகழ்பெற்ற நடிகர் கவின். இவருக்கு சரவணன் மீனாட்சி சீரியலின்போதே பல ரசிகர்கள் உண்டு. ஆனாலும் பிக்பாஸில் இவரது ரசிகர்கள் பட்டாளம் மிகப் பெரிய அளவில் விரிவடைந்தது.
கவின் நடிப்பில் வெளியான லிப்ட் படமும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் கவின் ஜோடியாக அமிர்தா ஐயர் நடித்திருந்தார். இந்த படத்தைத் தொடர்ந்து கவின் டாடா எனும் படத்தில் நடித்துள்ளார். கணேஷ் கே பாபு இயக்கிய இந்த படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயண்ட் நிறுவனம் பெற்றுள்ளது.
கவின் ஜோடியாக இந்த படத்தில் பீஸ்ட் படத்தில் நடித்த அபர்ணாதாஸ் நடித்திருக்கிறார். டாடா படம் இந்த மாத இறுதியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…