சமீபத்தில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் ஷிவன் இருவரும் வாடகைத் தாய் மூலம் இரட்டை குழந்தை பெற்றுள்ள சம்பவத்தில், தற்போது வாடகைத் தாயாய் இருந்தவர் யார் என்று தெரியவந்துள்ளது.
திரையுலக பிரபலங்களால் ஆசிர்வதிக்கப்பட்டு கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு நயன்தாரா, விக்னேஷ் சிவன் திருமணம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, இவர்கள் இருவரும் வாடகைத் தாய் மூலம் இரட்டை குழந்தை பெற்றுள்ளனர். இது குறித்து, விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதற்கு பலர் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தாலும் இந்தியாவில் சட்டப்படி வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறுவதற்கான விதிகளை மீறி இவர்கள் குழந்தை பெற்றுள்ளனரா என்ற சர்ச்சையும் எழுந்தது. இவ்வாறு வாடகைத் தாய் மூலம் பிறந்த குழந்தைகள் குறைப்பிரசவத்தில் பிறந்துள்ளன என கூறப்படுகிறது.
இரண்டு குழந்தைகளும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் வைத்து பராமரிக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இவர்களுக்கு வாடகைத் தாய் யார் என்ற விவரங்கள் குறித்த தகவல்கள் இன்னும் வெளிவராமல் இருந்தது.
ஆனால், தற்போது வெளிவந்த தகவலின் படி, நயன்தாராவின் இரட்டைக் குழந்தைகளுக்கு வாடகைத் தாய், நயன்தாராவின் கேரளத்து உறவினர் எனக் கூறப்படுகிறது. இருப்பினும், அவர் யார்? உறவு முறை என்ன? போன்ற தகவல்கள் இன்னும் வெளிவரவில்லை. இதில், வாடகைத் தாயாக இருந்த அவருக்கு அனைத்துத் தகுதிகளும் உள்ளனவா என பரிசோதித்த பிறகே இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன என கூறப்படுகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…