Thu ,Mar 28, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

ஆர்ஆர்ஆர் பட நடிகர் மரணம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.. | RRR Movie Villain

Nandhinipriya Ganeshan Updated:
ஆர்ஆர்ஆர் பட நடிகர் மரணம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.. | RRR Movie Villain Representative Image.

எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர், ராம் சரண், ஆலியா பட், ஸ்ரேயா, சமுத்திரக்கனி உட்பட பலர் நடித்து கடந்த ஆண்டு மார்ச் 25ம் தேதி வெளியான படம், ‘ஆர்ஆர்ஆர்’. தமிழ், தெலுங்கு, இந்தி உள்பட 5 மொழிகளில் வெளியாகி பட்டித்தொட்டி பட்டையை கிளப்பிய இந்த படம், ரூ.1,150 கோடிக்கு மேல் வசூலித்து வரலாற்று சாதனை புரிந்தது. 

இந்தப் படத்தில் வரும் 'சர் ஸ்காட்' என்ற வில்லன் கேரக்டரில் நடித்தவர் ஆங்கிலேய நடிகர் ரே.ஸ்டீவன்சன் (Ray Stevenson). அவருடைய வில்லத்தனமான நடிப்பு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதுமட்டுமல்லாமல், மார்வெலின் 'தோர்', பிரபல வெப் சீரிஸான 'வைக்கிங்ஸ்' போன்றவற்றிலும் நடித்திருக்கிறார்.

மே 25, 1964ம் ஆண்டு வடக்கு அயர்லாந்தின் லிஸ்பர்னில் பிறந்த ஸ்டீவன்சன், 1990களில் ஐரோப்பிய தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் டெலிஃபிலிம்களில் நடித்ததன் மூலம் சினிமா வாழ்க்கையில் அடியெடுத்துவைத்தார். இந்தநிலையில், உடல்நலக்குறைவால் அவர் இத்தாலியில் நேற்று காலமானார். 

அவர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள 'ஆர்ஆர்ஆர்' படக் குழு, 'அனைவருக்கும் அதிர்ச்சியளிக்கும் செய்தி, ரே ஸ்டீவன்சன், நிம்மதியாக ஓய்வெடுங்கள். நீங்கள் எங்கள் இதயங்களில் Sir Scott -ஆக என்றென்றும் இருப்பீர்கள்' என்று பதிவிட்டுள்ளது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்