Thu ,Mar 28, 2024

சென்செக்ஸ் 74,077.04
1,080.73sensex(1.48%)
நிஃப்டி22,472.80
349.15sensex(1.58%)
USD
81.57
Exclusive

புது ரோலில் சந்தானம்… ஏஜென்ட் கண்ணாயிரம் மூவி டிரெய்லர் வெளியீடு…

Gowthami Subramani [IST]
புது ரோலில் சந்தானம்… ஏஜென்ட் கண்ணாயிரம் மூவி டிரெய்லர் வெளியீடு… Representative Image.

சந்தானம் ஹீரோவாக நடித்திருக்கும் ஏஜென்ட் கண்ணாயிரம் படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகி உள்ளது. இது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது.

காமெடி நடிகனாக வலம் வந்த சந்தானம் ஹீரோவாக பெரும்பாலான் படங்களில் நடித்துள்ளார். ஆனால், அந்தப் படங்களில் சந்தானம் செய்யும் காமெடிக்கு மிஞ்சியது எதுவும் இல்லை என்றே கூறலாம். தற்போது சந்தானம் துப்பறிவாளனாக நடிக்கும் புதிய படம் ஒன்று வெளியாகி உள்ளது. இந்தப் படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக, ரியா சுமன் நடித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து, ஸ்ருதி ஹரிஹரன், முனிஷ்காந்த், ரெடின் கிங்ஸ்லி, புகழ் உள்ளிட்ட பலரும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

மனோஜ் பீதா இயக்கியுள்ள இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. சந்தானம் நடிப்பில், யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் வெளியாக உள்ள இந்தப் படத்தை இந்த மாதம் 24 ஆம் நாள் வெளியிட உள்லதாக படக் குழு திட்டமிட்டுள்ளது.

இந்த படத்திற்கு முன்னரே சந்தானம் நடித்த கடைசி திரைப்படமாக ரத்ன குமார் இயக்கத்தில் வெளியான குலுகுலு திரைப்படம் ஆகும். அந்தப் படத்தில் சுமாரான வரவேற்பு கிடைத்தது. இருப்பினும், புது முக ரோலில் நடிக்கும் சந்தானத்தின் இந்தப் படம் வெற்றியடையும் என கூறப்படுகிறது.



உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்