சிம்பு நடித்துவரும் கொரோனா குமார் திரைப்படம் மேற்கொண்டு நகராமல் டிராப் ஆகும் நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அந்த படத்துக்கு பிளாக் செய்த கால்ஷீட்டை யாருக்கு கொடுக்கலாம் என யோசித்து வந்த நிலையில், சிம்புவுடன் லிங்குசாமி இணையவிருப்பதாகவும், அது கூடிய விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் எனவும் தகவல் வந்துள்ளது.
மாநாடு படத்தின் மூலம் சிம்பு கம்பேக் கொடுத்தார். அந்த திரைப்படம் 100 கோடிக்கும் அதிகமான கலெக்ஷனையும் அள்ளி, சிம்புவை மீண்டும் ஸ்டார் நடிகர் அந்தஸ்துக்கு உயர்த்தியுள்ளது. சமீபத்தில் கமல்ஹாசன் நடிக்கும் விக்ரம் பட இசை வெளியீட்டு விழாவுக்கு வந்த சிம்பு மிகவும் எனர்ஜெடிக்காக காட்சியளித்தார். விழாவில் கமல்ஹாசனை வழக்கம்போல புகழ்ந்து, அவர் பாடலுக்கு சில ஸ்டெப்களையும் போட்டு ரசிகர்களை குதூகலப்படுத்தினார். இதே விழாவுக்கு ஐசரி கணேசனும் வந்திருந்தார்.
ஜூன் 3 கமல்ஹாசன் இந்த தியேட்டரில்தான் விக்ரம் பாக்க
போறாராம்! புக் பண்ணிட்டீங்களா? ஆமா எந்த ஷோ?
சிம்புவும் ஐசரி கணேசனும் ஏற்கனவே ஒரு ஒப்பந்தத்தில் இரண்டு படங்களை எடுக்க திட்டமிட்டு படப்பிடிப்பும் நடந்து வருகின்றது. கௌதம் மேனனின் வெந்து தணிந்தது காடு திரைப்படம் கிட்டத்தட்ட முடியும் தருவாயில் இருக்கிறது. பத்து தல திரைப்பட ஷூட்டிங் விரைவில் துவங்கும் எனவும் கூறப்படுகிறது. இதனிடையே லிங்குசாமியுடன் இணையும் படம் சூட்டோடு சூடாக மிக விரைவில் துவங்கும் எனவும் கூறப்படுகிறது.
லிங்குசாமி சமீபத்தில் ஒரு பட விழாவில் சிம்புவை சந்தித்திருந்த நிலையில், அவருக்கு கதை சொல்ல நேரம் கேட்டிருந்ததாக தகவல் வெளியானது. மீண்டும் இருவரும் சந்தித்த நிலையில், லிங்குசாமி கூறிய லைன் சிம்புவுக்கு பிடித்திருக்கிறதாம். இதனால் இந்த கூட்டணி நிச்சயமாக உறுதியாகும் என தெரிகிறது. இந்த படத்தையும் ஐசரி கணேசன்தான் தயாரிக்கவிருக்கிறார்.
சண்டக்கோழி படம் மாதிரியான ஒரு ஸ்கிரிப்ட் என கூறப்படுகிறது. வெந்து தணிந்தது காடு எப்போது ரிலீஸ், பத்து தல ஷூட்டிங் எப்போது முடியும், ரெண்டு படங்களோட இசை, பர்ஸ்ட் சிங்கிள், டீசர், டிரெய்லர் எல்லாம் எப்ப வெளியாகுதுனு பொறுத்திருந்து பார்க்கலாம்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…