Mon ,Apr 22, 2024

சென்செக்ஸ் 73,381.70
293.37sensex(0.40%)
நிஃப்டி22,263.45
116.45sensex(0.53%)
USD
81.57
Exclusive

சினம் படம் எப்படி இருக்கு? அருண் விஜய் நடித்துள்ள சினம் திரைப்பட விமர்சனம்!

UDHAYA KUMAR September 16, 2022 & 10:00 [IST]
சினம் படம் எப்படி இருக்கு? அருண் விஜய் நடித்துள்ள சினம் திரைப்பட விமர்சனம்!Representative Image.

படம் - சினம்
இயக்கம் - ஜிஎன்ஆர் குமரவேலன்
தயாரிப்பு - மூவி ஸ்லைட்ஸ் பிரைவேட் லிமிட்டட்
தயாரிப்பாளர் - விஜயகுமார்
நடிப்பு - அருண்விஜய்
வகை - திரில்லர்

ஜி. என். ஆர். குமாரவேலன் இயக்கத்தில் தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் நாயகன் அருண் விஜய் நடித்துள்ள படம் சினம்.   மூவி ஸ்லைட்ஸ் பிரைவேட் லிமிட்டட் சார்பில் விஜயகுமார் தயாரித்துள்ள இந்த படம் செப்டம்பர் 16ம் தேதியான இன்று வெளிவந்துள்ளது.  இப்படத்துக்கு ஷபீர் இசையமைத்துள்ளார். அருண் விஜய்க்கு ஜோடியாக பாலக் லால்வனி மற்றும்  முக்கிய கதாபாத்திரத்தில் காளிவெங்கட் நடித்துள்ளனர்.

கதைச் சுருக்கம்

ஒரு நாள் இரவு தன்னுடைய மனைவியை, அடையாளம் தெரியாத நபர்கள் வன்புணர்வு செய்து கொன்று விடுகிறார்கள். அவர்கள் யாரென்று கண்டுபிடித்து தன் மனைவியை கொன்றவர்களை பழிவாங்குகிறார் நாயகன். 

விமர்சனம்

 சினம் திரைப்படத்தில் அருண் விஜய் காவல் துறை அதிகாரியாக நடித்துள்ளார். மாஃபியா, தடம், குற்றம் 23, தமிழ் ராக்கர்ஸ்  உள்ளிட்ட படங்களின் வரிசையில்  அருண் விஜய்க்கே உரித்த பாணியான 'க்ரைம் த்ரில்லரில்' மீண்டும் தான் யார் என்பதை நிரூபித்துள்ளார்.  

கதாநாயகியாக பாலக் லால்வனி நல்ல தேர்வு. ஓரளவுக்கு நடிப்பும் கதைக்கு ஏற்றவாறு இருந்தது.  பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றத்தை மையமாக கொண்டு  எடுக்கப்பட்டுள்ளது. படத்தின் முதல் பாதி காதல், கல்யாணம், கடமை , கொலை என கேள்வியில் முடிய!  இன்வெஸ்டிகேஷன் மூலம் அக்கேள்விக்கு படத்தின் கதாநாயகன் பதிலை தேடி வெற்றிக்கண்டார? என்பதே இப்படத்தின் மீதி கதை.

சினம் படத்தின் திரைக்கதையை வேகமாகவும், சஸ்பன்ஸூடனும் நகர்த்த வேண்டும் என்று திட்டமிட்டே கதையை நகர்த்திக் கொண்டிருக்கிறார் இயக்குநர். அது இயல்பாக இல்லாமல், திணித்தது போல் மக்களை உணர வைக்கிறது. ஆனாலும் சினிமாவில் இதெல்லாம் சகஜம்தானே என பொருட்படுத்தாமல் கடந்துவிடலாம். அருண்விஜய்க்கு பிறகு காளி வெங்கட் தனது கதாபாத்திரத்தை சிறப்பாக நடித்துள்ளார். அதற்கு ஏற்றார்போல பொருந்தியுள்ளார். 2 மணி நேரம்தான் என்பதால் விறுவிறுப்பாக இருக்கிறது. நிச்சயமாக ஒரு முறை தியேட்டரில் சென்று பார்க்கலாம். 


 

 

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்