Mon ,Dec 04, 2023

சென்செக்ஸ் 68,865.12
1,383.93sensex(2.05%)
நிஃப்டி20,686.80
418.90sensex(2.07%)
USD
81.57
Exclusive

கேகேவின் அழகிய குரலில் நம்மை உலுக்கிய பாடல்கள்!

UDHAYA KUMAR June 01, 2022 & 13:08 [IST]
கேகேவின் அழகிய குரலில் நம்மை உலுக்கிய பாடல்கள்!Representative Image.

கேகே அல்லது KK என்றழைக்கப்படும் கிருஷ்ணகுமார் குன்னத் இந்தியாவின் டாப் சிங்கர்களில் ஒருவர். இவரது பாடல்களில் மெய்மறந்து ரசிக்காதவர்கள் மிக குறைவு. இவரின் பாடல்கள் நம் பள்ளிப் பருவ, இளமை காலத்தை நினைவுக்கு கொண்டுவரும். அப்படி இவர் பாடி பட்டிதொட்டியெல்லாம் ஹிட்டான பாடல்களைத் தான் இப்போது பார்க்கபோகிறோம். 

1. கல்லூரிச் சாலை

காதல் தேசம் படத்தில் இடம்பெற்றுள்ள கல்லூரிச் சாலை எனத் தொடங்கும் பாடலை பாடி தமிழ் சினிமாவில் அறிமுகமானார் பாடகர் கேகே. 

இன்பத்தை கருவாக்கினாள் பெண்
இன்பத்தை கருவாக்கினாள் பெண்
உலகத்தில் மனிதனை உருவாக்கினாள் பெண்
உலகத்தில் மனிதனை உருவாக்கினாள் பெண்

விண்ணவர்கும் மண்ணவர்க்கும்
விலையற்ற செல்வம் பெண்
விலையற்ற செல்வம் பெண் 

இதில் வரும் முதல் விலையற்ற செல்வம் பெண்ணுக்கும் இரண்டாவது விலையற்ற செல்வம் பெண் ஒரு வேறுபாட்டைக் காண்பித்திருப்பார் பாருங்கள். பாடலை நீங்களே கேளுங்கள். 


2. ஸ்ட்ராபெர்ரி கண்ணே

மின்சார கனவு திரைப்படத்தில் பிரபுதேவா, கஜோல் ஆடும் அழகான பாடலான ஸ்ட்ராபெர்ரி கண்ணே பாடலை பாடியவரும் நம்ம கேகேதான். 

 


லோகேஷை நிராகரித்த பெரிய நடிகர்! பிரம்மாண்ட கதை இருந்தாதான் நடிப்பாராம்!



தங்க தட்டில் சோரு
பென்சு ஏசி காரு
இருந்தும் நெஞ்சோடு
சொல்லாத பாரம் என்ன

தனிமை இனிமையாக
இளமை குளுமையாக
உனது கண்ணோடு
சொல்லாத சோகம் என்ன - வரிகளை பாடும்போது மனம் ஐஸ்கிரீம் போல உருகி வழிந்துவிடும்போல இருக்கும். 


3. பூவுக்கெல்லாம் சிறகு முளைத்தது

கேகேவின் ரசிகராக ஒருவர் மாறியிருந்தால் அவருக்கு பிடித்த முதல் பாடலாக நிச்சயம் இதுதான் இருந்திருக்கும். அப்படியொரு அசாத்தியமான குரல் வளம் கொண்ட கேகே, இந்த பாடலில் அதனை முழுமையாக பயன்படுத்தியிருப்பார். 

பூவுக்கெல்லாம் சிறகு முளைத்தது
எந்தன் தோட்டத்தில்
விண்மீன் எல்லாம் நிலவாய் போனது
எந்தன் வானத்தில்

முப்பது நாளும் முகூர்த்தம் ஆனது
எந்தன் மாதத்தில் முள்ளில்
கூட தேன்துளி கசிந்தது
எந்தன் ராகத்தில் - என்ற வரிகளை ஸ்லோவாக தொடங்கி அடுத்து வரும் 

இது எப்படி எப்படி நியாயம்
எல்லாம் காதல் செய்த மாயம்
இது எப்படி எப்படி நியாயம்
எல்லாம் காதல் செய்த மாயம் - என்பதை கொஞ்சம் வேகமாக பாட வேண்டும் என்பது போல அமைத்திருப்பார்கள். 

இரண்டு வேரியேசன்களையும் சரியாக பிடித்து பாடியிருப்பார் கேகே. 

4. லவ் பண்ணு

12பி படத்தில் வரும் இந்த பாடலில் முதல் வரியில் 
ஒரு புன்னகை பூவே
சிறு பூக்களின் தீவே என பாடிவிட்டு, 
ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் என ஒரு ஹம்மிங் செய்வார். அட அதில் விழுந்தவர்கள் எழுவதற்குள் பாடல் முடிந்துவிடும். திரும்பவும் முதலிலிருந்தே கேட்கலாம் என 4, 5 முறை இதே பாடலை திரும்ப திரும்ப கேட்டுவிடுவோம். 

இடையில் வரும் வரிகளில், 

உன் படுக்கை அறையிலே
ஒரு வசந்தம் வேண்டுமா
உன் குளியல் அறையிலே
Winter season வேண்டுமா
நீ மாற சொன்னதும் நான்கு சீசனும் மாற வேண்டுமா
Love பண்ணு - என வரும் வரிகள் உண்மையிலேயே நம்மை குளிர்காலத்துக்குள் கூட்டிச் சென்றுவிடும். 

5. நினைத்து நினைத்து பார்த்தேன்

7ஜி ரெயின்போ காலணி படத்தில் காதலி இறந்த பிறகு காதலன் அவளை நினைத்து பாடும் பாடலாக, நினைத்து நினைத்து பார்த்தேன் பாடல் நம்மை உலுக்கி எடுத்துவிடும். இசை ஒரு பக்கம், பாடல் காட்சி ஒரு பக்கம் என நம்மை வதைத்துக் கொண்டிருக்க, கேகேவின் குரல் நம்மை அறியாமலேயே நம் கண்களை குளமாக்கிக் கொண்டிருக்கும்.  

தூது பேசும்
கொலுசின் ஒலியை
அறைகள் கேட்கும்
எப்படி சொல்வேன்
உடைந்து போன
வளையல் பேசுமா ஆ

 உள்ளங்கையில்
வெப்பம் சேர்க்கும் விரல்கள்
இன்று எங்கே தோளில்
சாய்ந்து கதைகள் பேச
முகமும் இல்லை இங்கே

எனும் வரிகளில் அவர் செய்யும் உருக்கும் நம்மில் பலரின் உறக்கத்தை கெடுக்கும் வலியைக் கொடுத்திருக்கும். நம் ஆழ் மனது காதலை ஊருக்கு வெளிச்சம்போட்டு காட்டும் வலிமை கேகேவின் குரலுக்கு உண்டு என்றால் மிகையல்ல. இன்னமும் பல பாடல்களை பாடியுள்ளார் கேகே. அவரின் பாடல்களை இங்கு காண்போம். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்