டாக்டர், டான் திரைப்படங்கள் 100 கோடி ரூபாய் வசூலைத் தந்ததால், சிவகார்த்திகேயனின் சம்பளம் உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் நாயகனாக உள்ளார் சிவகார்த்திகேயன். இன்னும் ஒரு சில வருடங்களில் விஜய், அஜித் உள்ளிட்ட உச்ச நடிகர்களுக்கு சமமான இடத்துக்கு வந்துவிடுவார் என்றே நினைக்கத் தோன்றுகிறது. அந்த அளவுக்கு அவரின் வளர்ச்சி அதிவேகமாக சென்றுகொண்டிருக்கிறது. தான் தேர்ந்தெடுக்கும் படங்களை மிகவும் கவனமாக பார்த்து பார்த்து ஒப்பந்தமாகிறார்.
சமீபத்தில் அவர் நடிப்பில் இரண்டு படங்கள் 100 கோடி வசூலைப் பெற்றிருந்தது. முதல் படம் டாக்டர். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் கடத்தல் பற்றியதாக இருந்தது. அடுத்த படம் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் கல்லூரி பற்றிய படமாக அமைந்தது.
இந்த இரண்டு படங்களிலும் தலா 100 கோடி வசூலித்து தமிழகத்தின் டாப் நடிகர்களுடன் போட்டி போடும் அளவுக்கு வளர்ந்துவிட்ட சிவகார்த்திகேயன், தற்போது சம்பளத்தையும் உயர்த்திவிட்டாராம். இதுவரை 25 லிருந்து 30 வரை வாங்கிக்கொண்டிருந்த அவர் இனி 30 கோடி சம்பளம் வாங்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. சிலரோ அவர் ஏற்கனவே டான் திரைப்படத்துக்கு 30 கோடி சம்பளம் வாங்கிவிட்டார் என கூறுகிறார்கள்.
தமிழ் தெலுங்கு பைலிங்குவல் படம், கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்துக்கு ஒரு படம் என அடுத்தடுத்து கமிட் ஆகியிருப்பதால் இந்த சம்பள உயர்வு என கூறப்படுகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…