கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தில் கடைசி 3 நிமிடங்கள் வந்து திரையரங்கை அதிர விட்டார் சூர்யா. அவரின் நடிப்பு விஜய், அஜித் ரசிகர்களையும் ஈர்த்தது. அந்த அளவுக்கு மிகவும் கொடூரமான வில்லனாக அந்த கதாபாத்திரம் எழுதப்பட்டுள்ளது. இந்நிலையில், விக்ரம் படத்தில் சூர்யா எப்படியோ அதன்படி ஜெய்லர் படத்தில் ஒரு இளம் நடிகரை நடிக்கவைக்க முடிவு செய்துள்ளது படக்குழு. இதனால் ஜெய்லரின் அடுத்த பாகமும் வெளியாகும் என தகவல் வந்துள்ளது.
பீஸ்ட் பட தோல்விக்கு பிறகு நெல்சன் திலீப்குமார், அண்ணாத்த தோல்விக்கு பிறகு ரஜினி, இரண்டு படங்களையும் லாபமின்றி எதிர்கொண்ட சன்பிக்சர்ஸ் என மூவரும் இணையும் படம்தான் தலைவர் 169. இந்த படத்துக்கு அவசர அவசரமாக வெட்டி ஒட்டிக் கொண்டு வந்த போஸ்டரில் இந்த படத்தின் பெயர் இடம்பெற்றிருந்தது. அதுதான் ஜெயிலர்.
விக்ரம் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் நாளுக்குநாள் பிரம்மாண்டமாக போய்க் கொண்டிருக்கு, உடனடியாக அவசரமாக வெளியானது மாதிரியாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில், விக்ரம் படத்தில் இடம்பெற்றது மாதிரியே இந்த படத்திலும் ஒரு கேமியோ இடம்பெறவுள்ளதாம்.
அந்த கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. அவரின் காட்சிகள் 5 முதல் 7 நிமிடங்கள் படத்தில் இடம்பெறும் என தெரிகிறது. அவர் ரஜினியை அண்ணா என அழைக்கும்படியா காட்சி அமைக்கப்படவுள்ளதாகவும், இதனால் அவர் ரஜினிக்கு தம்பி கதாபாத்திரத்தில் நடிக்கிறாரோ எனவும் வெளியில் பேச்சு அடிபட்டு வருகிறது.
இவை எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில், ரஜினி ரசிகர்கள் எதனால் இப்படி பேசிக்கொண்டிருக்கிறார்கள் எனவும் புரியவில்லை. அவர்களுக்கு படத்தின் அப்டேட் கிடைக்கும்போதுதான் உண்மை தெரியவரும். இருந்தாலும் ரஜினி படத்தில் சிவகார்த்திகேயன் இருந்தால் நல்லாத்தானே இருக்கும். ரஜினியின் தீவிர ரசிகர், நெல்சன் திலீப்குமாரின் நண்பர் வேறு. பொறுத்திருந்து பார்க்கலாம்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…