SK20 என இதுவரை அழைக்கப்பட்டு வந்த திரைப்படத்தின் பெயரை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது படக்குழு. இந்த படத்துக்கு பிரின்ஸ் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் பிரின்ஸ் என சிவகார்த்திகேயனை செல்லமாக அழைத்து வருகின்ற நிலையில், அவரின் படத்துக்கே பிரின்ஸ் என பெயர் வைத்துள்ளனர்.
தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு உயரத்தை பெஞ்ச் மார்க்காக வைத்துக் கொண்டு உயர உயர பறக்கும் நடிகர்கள் ஏராளம். ஆனால் அவர்கள் நினைத்த உயரத்தை அடைந்தார்களா என்றால் பலருக்கு அது கேள்விக்குறிதான். ஆனால் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருந்து வந்து படங்களில் நடித்து நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து படிப்படியாக அசுர வளர்ச்சியடைந்தவர் என்றால் அது நம்ம சிவகார்த்திகேயன்தான்.
பின்தங்கிய ஊர்களிலிலிருந்து வந்தவர்களையும் ஏதோ ஒரு நம்பிக்கை நாளை நாமும் ஜெயித்துவிடுவோம் என்பதை நோக்கி ஓட வைத்தால் அதற்கு இதுவும் ஒரு காரணம். சிவகார்த்திகேயன் போல அயராது உழைத்தால் நமக்கும் வெற்றி வந்து சேரும். டாக்டர், டான் உள்ளிட்ட திரைப்படங்களை நல்ல டைமிங்கில் ரிலீஸ் செய்து 100 கோடி வரை வசூல் செய்த படங்களாக்கி சாதனை பட்டியிலில் இடம்பிடித்துள்ளார் சிவகார்த்திகேயன்.
டான் திரைப்படத்தில் குடும்பங்கள் கொண்டாடும் வெற்றியை அறுவடை செய்தவர், மெல்ல மெல்ல விஜய், அஜித் இடங்களை நோக்கி தன்னை நகர்த்தி வருகிறார். குழந்தைகளிலிருந்து தொடங்கி, இளைஞர்கள், இளம்பெண்கள், தாய்மார்கள், தந்தைமார்கள் என தன் வசப்படுத்தி வருகிறார் சிவகார்த்திகேயன். தனக்கென வயசு வித்தியாசமில்லாத ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கும் பணியில் வெகு சிறப்பாக ஈடுபட்டு வரும் சிவகார்த்திகேயனின் அடுத்த படம்தான் பிரின்ஸ்.
தமிழகத்தின் செல்லப்பிள்ளையான சிவகார்த்திகேயனின் பட்டப்பெயரும் கூட பிரின்ஸ்தான். அவரின் அடுத்த படத்துக்கு அந்த பெயரை வைத்து தனக்கான பட்டப்பெயருக்கு நியாயம் கற்பிக்க பார்க்கிறார் என பலரும் கூறவும் வாய்ப்புண்டு. சிவகார்த்திகேயனுடன் மரியா , சத்யராஜ் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். தமன் இசையில் பாடல்கள், பின்னணி கோர்வை சிறப்பாக வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜாதி ரத்னாலு படத்தின் இயக்குநர்தான் இந்த பிரின்ஸ் படத்தை இயக்கியுள்ளார். ஃபேமிலி எண்டர்டெய்னராக படம் உருவாகியுள்ளது. படத்தில் காமெடிக்கு பஞ்சம் இருக்காது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக்தான் இது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…