Fri ,Apr 19, 2024

சென்செக்ஸ் 72,488.99
-454.69sensex(-0.62%)
நிஃப்டி21,995.85
-152.05sensex(-0.69%)
USD
81.57
Exclusive

ரஜினி, கமல் பட சண்டை பயிற்சியாளர் மரணம்.. திரையுலகினர் இரங்கல்!!

Sekar Updated:
ரஜினி, கமல் பட சண்டை பயிற்சியாளர் மரணம்.. திரையுலகினர் இரங்கல்!!Representative Image.

தமிழ் சினிமாவின் பிரபல சண்டை பயிற்சியாளராக ஒரு காலத்தில் கொடிகட்டி பறந்த ஜூடோ ரத்னம் இன்று காலமானார். அவருக்கு வயது 93.

தமிழ் உள்ளிட்ட தென்னிந்தியா சினிமாக்களில் 1970 மற்றும் 80களில் கொடிக்கட்டி பறந்த சண்டை பயிற்சியாளர் ஜோடு ரத்னம், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலகநாயகன் கமல்ஹாசன் உள்ளிட்ட பலருக்கும் சண்டைப்பயிற்சி கற்றுக்கொடுத்துள்ளார். 

இதுவரை 1,500 படங்களுக்கு மேல் சண்டைப்பயிற்சி இயக்குநராக பணியாற்றியுள்ள ஜூடோ ரத்னம், ரஜினிக்கு மட்டுமே 46 படங்களில் சண்டைப்பயிற்சி இயக்குநராக இருந்துள்ளார். இவர் சண்டை பயிற்சி இயக்குனராக கடைசியாக, 1992 ஆம் ஆண்டு வெளியான பாண்டியன் படத்தில் பணியாற்றினார். மேலும் தலைநகரம் உள்ளிட்ட சில படங்களில் நடித்தும் உள்ளார்.

இந்நிலையில், அவர் தனது சொந்த ஊரான குடியாத்தத்தில் இன்று உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்