தமிழ் சேனல் என்றாலே நமக்கு முதலில் நினைவுக்கு வருவது சன் டிவி சேனல் தான். 1993 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதில் இருந்து இன்று வரை டிஆர்பி ரேட்டிங்கில் பட்டயை கிளப்பி வரும் நம்பர் ஒன் தமிழ் சேனல். வாரத்தின் ஏழு நாட்களிலுமே ரசிகர்களை குஷிப்படுத்துவதற்காக சீரியல்கள், ரியல்ட்டி ஷோக்கள், செய்திகள், திரைப்படங்கள் என பல நிகழ்ச்சிகளை தொடர்ந்து ஒளிப்பரப்பி வருகிறது.
இந்தியாவை தாண்டி உலகம் முழுவதும் சன் டிவி சேனலுக்கு ரசிகர்கள் ஏராளாம். அதிலும் சன் டிவி நாடகங்களுக்கு நம் முன்னோர் காலத்தில் இருந்தே அதிகம் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. அப்படி ஒளிப்பரப்பான எத்தனையோ நாடகங்கள் மக்கள் மனதில் இன்றளவும் நீங்க இடம் பிடித்துள்ளன. இதற்கு காரணம் அந்தந்த சீரியல்களின் கதாபாத்திரங்கள். அந்தவகையில், தற்போது சன் டிவியில் ஒளிப்பரப்பாகும் அனைத்து சீரியல்களின் நடிகைகளின் உண்மையான பெயர், பிறந்த தேதி, சம்பளம் குறித்த முழுத்தகவல்களையும் பார்க்கலாம்.
கேப்ரியல்லா செல்லஸ் | சுந்தரி
கேப்ரியல்லா செல்லஸ் ஒரு இந்திய நடிகை, மாடல், டிக்டோக்கர் மற்றும் ஸ்கிரிப்ட் எழுத்தாளர் ஆவார், அவர் தமிழ் தொடர்களிலும் திரைப்படத் துறையிலும் பணியாற்றி வருகிறார். 17 மே 1994 அன்று சென்னையில் பிறந்த இவர், தமிழ் திரைப்படமான 'கபாலி' மூலம் அறிமுகமானார். பின்னர், காஞ்சனா 3, ஐரா, கட்டுமரம் உள்ளிட்ட படங்களிலும் பணியாற்றியுள்ளார். விஜய் டிவியின் ரியாலிட்டி ஷோவான 'கலக்க போவது யாரு' விலும் இடம்பெற்றார். தற்போது, சன் டிவி சீரியல் 'சுந்தரி' மூலம் சுந்தரியாக பிரபலமடைந்துள்ளார். இவர் அந்த சீரியலில் ஒரு எபிசோடுக்கு வாங்கும் சம்பளம் ரூ.40 ஆயிரம் [மாத சம்பளம் ரூ.8 லட்சம்+].
தேப்ஜானி மோடக் | சந்தியா
தேப்ஜானி மோதக் ஒரு மாடல் மற்றும் நடிகை ஆவார், இவர் தமிழ் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி துறையில் பணிபுரிகிறார். 20 மார்ச் 1996 அன்று கொல்கத்தாவில் பிறந்த இவர், ராஜீப் சாட்டர்ஜி இயக்கிய நாக் அவுட் (2013) என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அவர் 'அப்போன்ஜோன்' என்ற பெங்காலி சீரியல் மூலம் தொலைக்காட்சியில் அறிமுகமானார். பின்னர், சன் டிவியில் ராசாத்தி சீரியலின் மூலம் தமிழ் தொலைக்காட்சியில் அறிமுகமானார். இப்போது சன் டிவியில் 'வானத்தை போல' தொடரில் சந்தியாவாக நடித்து வருகிறார்.
மான்யா ஆனந்த் | துளசி ராஜபாண்டி
மன்யா ஆனந்த் ஒரு இந்திய நடிகை ஆவார், அவர் முக்கியமாக தமிழ் மற்றும் தெலுங்கு தொலைக்காட்சி தொடர்களில் பணியாற்றியுள்ளார். ஃபேஷன் ஸ்டைலிஸ்டாக தனது வாழ்க்கையைத் தொடங்கி மான்யா, 'பிலி ஹெந்தி' என்ற கன்னட தொலைக்காட்சித் தொடரான மூலம் சீரியல் நடிகையாக அறிமுகமானார். பின்னர், சன் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் வானத்தைப் போல சீரியலில் துளசி என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமாகியுள்ளார். இந்தத் தொடரில் துளசி வேடத்தில் முதலில் ஸ்வேதா கெல்கே நடித்து வந்தார். தற்போது அவருக்குப் பதிலாக துளசி வேடத்தில் மான்யா நடித்து வருகிறார்.
ஆல்யா மானசா | இனியா
திருச்சிராப்பள்ளியில் 27 மே 1994 அன்று பிறந்த ஆல்யா மானசா, கலைஞர் டிவியில் ரியாலிட்டி டான்ஸ் நிகழ்ச்சியான மானாட மயிலாட சீசன் 10 மூலம் தமிழ் தொலைக்காட்சியில் அறிமுகமானார். பின்னர் 2017 ஆம் ஆண்டு, விஜய் டிவியில் ஒளிபரப்பான 'ராஜா ராணி' என்ற சீரியல் மூலம் சீரியல் நடிகையாக அறிமுகமாகி, செம்பாவாக பிரபலமானார். இந்த சீரியலில் சஞ்சீவும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அப்போது இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டு பின்னர் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு ஆல்யா மானசா 'ராஜா ராணி 2' சீரியலிலும் நடித்து வந்தார். பின்னர், இரண்டாவது முறை கர்ப்பமானதால், அந்த சீரியலில் இருந்து விலகிவிட்டார். தற்போது, சன் டிவியில் இனியா தொடரில் நடித்து வருகிறார்.
ஸ்ருதி ராஜ் | இசைப்பிரியா விஜயகிருஷ்ணன்
ஸ்ருதி ராஜ் ஒரு இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகை ஆவார். 27 மார்ச் 1980 சென்னையில் பிறந்த ஸ்ருதி தமிழ் டிவி சீரியலுக்கு வருவதற்கு முன்பு சில மலையாளம், கன்னடம், தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் பணியாற்றியுள்ளார். மலையாளத் திரைப்படமான அக்ரஜன் (1995) படத்தின் மூலம் தனது திரைப்பட வாழ்க்கையை தொடங்கினார். அதன்பின்னர், அவர் தமிழ் திரைப்படமான மாண்புமிகு மாணவன் படத்தில் ப்ரியா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
மேலும், ஸ்ருதி விஜய் டிவி நகைச்சுவை நாடகமான ஆபிஸில் ராஜலக்ஷ்மியாக நடித்து பிரபலமானவர். அதன்பிறகு, 2009 ஆம் ஆண்டு தீபக் தினகருக்கு ஜோடியாக 'தென்றல்' நாடகத்தில் துளசி என்ற கதாபாத்திரத்தின் மூலம் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தார். தற்போது, சன் டிவியில் 'தாலாட்டு' சீரியலில் இசைப்பிரியா விஜயகிருஷ்ணன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர் அந்த சீரியலில் ஒரு எபிசோடுக்கு வாங்கும் சம்பளம் ரூ.40 ஆயிரம் [மாத சம்பளம் ரூ.8 லட்சம்+].
ஹரிகா சாது | அஞ்சலி
ஹரிகா சாது ஒரு இந்திய நடிகை மற்றும் தொலைக்காட்சி கலைஞர் ஆவார். 23 அக்டோபர் 1997 அன்று ஆந்திராவில் பிறந்த இவர், ஜெமினி டிவியில் ஒளிபரப்பான 'கல்யாணி' என்ற தெலுங்கு சீரியல் மூலம் சீரியல் நடிகையாக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் 'அஞ்சலி' சீரியலில் அஞ்சலி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…