தமிழ் சேனல் என்றாலே நமக்கு முதலில் நினைவுக்கு வருவது சன் டிவி சேனல் தான். 1993 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதில் இருந்து இன்று வரை டிஆர்பி ரேட்டிங்கில் பட்டயை கிளப்பி வரும் நம்பர் ஒன் தமிழ் சேனல். வாரத்தின் ஏழு நாட்களிலுமே ரசிகர்களை குஷிப்படுத்துவதற்காக சீரியல்கள், ரியல்ட்டி ஷோக்கள், செய்திகள், திரைப்படங்கள் என பல நிகழ்ச்சிகளை தொடர்ந்து ஒளிப்பரப்பி வருகிறது.
இந்தியாவை தாண்டி உலகம் முழுவதும் சன் டிவி சேனலுக்கு ரசிகர்கள் ஏராளாம். அதிலும் சன் டிவி நாடகங்களுக்கு நம் முன்னோர் காலத்தில் இருந்தே அதிகம் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. அப்படி ஒளிப்பரப்பான எத்தனையோ நாடகங்கள் மக்கள் மனதில் இன்றளவும் நீங்க இடம் பிடித்துள்ளன. இதற்கு காரணம் அந்தந்த சீரியல்களின் கதாபாத்திரங்கள். அந்தவகையில், தற்போது சன் டிவியில் ஒளிப்பரப்பாகும் அனைத்து சீரியல்களின் நடிகைகளின் உண்மையான பெயர், பிறந்த தேதி, சம்பளம் குறித்த முழுத்தகவல்களையும் பார்க்கலாம்.
டெல்னா டேவிஸ் | பூமிகா
தென்னிந்திய நடிகையும் மாடலுமான டெல்னா டேவிஸ் 2015 ஆம் ஆண்டு முதல் மலையாளம் மற்றும் தமிழ் திரைப்படங்கள் மற்றும் தொடர்களில் முக்கியமாக பணியாற்றி வருகிறார். 24 செப்டம்பர் 1995 அன்று கேரளாவில் பிறந்த இவர், ஏபி முகன் இயக்கிய விடியும் வரை பேசு என்ற தமிழ் திரைப்படத்தில் அறிமுகமானார். பின்னர், விடியும் வரை பேசு, யூ டூ ப்ரூடஸ் (2015), ஹேப்பி வெட்டிங் (2016), மற்றும் குரங்கு பொம்மை (2017) போன்ற பல பிரபலமான திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் ஒரு நல்ல நடனக் கலைஞரும் கூட. தற்போது சன் டிவியில் அன்பே வா என்ற சீரியலில் பூமிகா என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
மதுமிதா.ஹெச் | ஜனனி
மதுமிதா எச் ஒரு இந்திய மாடல் மற்றும் நடிகை ஆவார், இவர் கன்னடம் மற்றும் தமிழ் திரைப்படத் துறையில் பணியாற்றி வருகிறார். பிப்ரவரி 1994 இல் கர்நாடகாவின் பெங்களூரில் பிறந்த இவர், 'புட்மல்லி ' என்ற கன்னட சீரியல் மூலம் தனது நடிப்பு வாழ்க்கையை தொடங்கினார். உதயா தொலைக்காட்சியில் நன்கு அறியப்பட்ட கன்னட சீரியலான ஜெய் ஹனுமானிலும் நடித்துள்ளார். பின்னர், மனசுனா மனசை என்ற சீரியல் மூலம் தெலுங்கு தொலைக்காட்சியில் அறிமுகமானார். அதைத்தொடர்ந்து, விஜய் வெங்கடேசனுடன் ஜீ தமிழில் 'பிரியாத வரம் வேண்டும்' என்ற தமிழ் சீரியலில் அறிமுகமானார். தற்போது சன் டிவியில் 'எதிர் நீச்சல்' சீரியலில் ஜனனியாக நடித்து வருகிறார்.
ஸ்ரீதிகா சனீஷ் | பாரதி
ஸ்ரீதிகா சனீஷ் ஒரு தமிழ் தொலைக்காட்சி மற்றும் திரைப்பட நடிகை ஆவார். 10 டிசம்பர் 1986 அன்று பிறந்த இவர் 'மகேஷ், சரண்யா மட்டும் பலர்' என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய பாத்திரத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். பின்னர், 2009 ஆம் ஆண்டு தனது இரண்டாவது படமான 'வெண்ணிலா கபடி குழு' மூலம் வெளிச்சத்திற்கு வந்தார். அவர் மதுரை முதல் தேனி வாழி ஆண்டிப்பட்டி (2009) மற்றும் வேங்கை (2011) உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
அதைத்தொடர்ந்து, சன் டிவியில் ரம்யா கிருஷ்ணனுடன் இணைந்து கலசம் சீரியலின் மூலம் நடிகையாக அறிமுகமானார். பின்னர், இவருக்கு 'நாதஸ்வரம்' சீரியல் பெரிய திருப்புமுனை என்றே சொல்லலாம். மலராக பிரபலமான இவர் தற்போது மகராசி சீரியலில் பாரதியாக நடித்து வருகிறார். இவர் அந்த சீரியலில் ஒரு எபிசோடுக்கு வாங்கும் சம்பளம் ரூ.20 ஆயிரம் [மாத சம்பளம் ரூ.4 லட்சம்+].
சைத்ரா ரெட்டி | கயல்
சைத்ரா ரெட்டி ஒரு தென்னிந்திய தொலைக்காட்சி நடிகை. 22 மார்ச் 1993 பெங்களூரில் பிறந்த இவர், கன்னட தொலைக்காட்சி தொடரான 'அவனு மேட்டே ஷ்ரவாணி' யில் அறிமுகமானார். பின்னர், ப்ரியா பவானி சங்கருக்கு பதிலாக கல்யாணம் முதல் காதல் வரை என்ற படத்தின் மூலம் தமிழ் தொலைக்காட்சியில் அறிமுகமானார். அதன்பிறகு, ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான 'யாரடி நீ மோகினி' மூலம் சுவேதாவாக பிரபலமானர். ஹெசரிடலி (2017), ரக்ட் (2019) உள்ளிட்ட கன்னட படங்களிலும் நடித்துள்ளார். தற்போது சன் டிவியில் கயல் சீரியலில் கயலாக பட்டையை கிளப்பி வருகிறார்.
ஷபானா ஷாஜஹான் | அஞ்சலி
ஷபானா ஷாஜஹான் ஆர்யன் ஒரு தென்னிந்திய நடிகை மற்றும் மாடல் ஆவார். 30 ஆகஸ்ட் 1993 அன்று கேரளாவில் பிறந்த ஷபானா முதன் முதலில் 'விஜயதசமி' என்ற மலையாள சீரியல் மூலம் சீரியல் நடிகையாக அறிமுகமானார். பின்னர், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் 'செம்பருத்தி' என்ற சீரியலில் பார்வதியாக பிரபலமானவர். தற்போது சன் டிவியில் மிஸ்டர் மனைவி சீரியலில் அஞ்சலியாக நடித்து வருகிறார்.
திவ்யா ஸ்ரீதர் | செவ்வந்தி மனோகர்
திவ்யா ஸ்ரீதர் ஒரு இந்திய நடிகை, மாடல் ஆவார். 11 டிசம்பர் 1993 பெங்களூருவில் பிறந்த திவ்யா பல மாடலிங் போட்டிகளில் கலந்து கொண்டு தனது வாழ்க்கையைத் தொடங்கினார். தற்போது, பல பிரபலமான ஆடை பிராண்டுகளுக்கு மாடலாக உள்ளார். பின்னர், சன் டிவி சீரியலான மகராசியில் அறிமுகமானார். கேளடி கண்மணி, கண்ணான கண்ணே மற்றும் சன் டிவி தொடர்களிலும் நடித்து பிரபலமானவர். தற்போது, செவ்வந்தி என்ற தொடலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தொலைக்காட்சி தொடர்கள் தவிர, திவ்யா பல தொலைக்காட்சி விளம்பரங்களிலும் பணியாற்றியுள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…