தமிழ் சேனல் என்றாலே நமக்கு முதலில் நினைவுக்கு வருவது சன் டிவி சேனல் தான். 1993 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதில் இருந்து இன்று வரை டிஆர்பி ரேட்டிங்கில் பட்டயை கிளப்பி வரும் நம்பர் ஒன் தமிழ் சேனல். வாரத்தின் ஏழு நாட்களிலுமே ரசிகர்களை குஷிப்படுத்துவதற்காக சீரியல்கள், ரியல்ட்டி ஷோக்கள், செய்திகள், திரைப்படங்கள் என பல நிகழ்ச்சிகளை தொடர்ந்து ஒளிப்பரப்பி வருகிறது.
இந்தியாவை தாண்டி உலகம் முழுவதும் சன் டிவி சேனலுக்கு ரசிகர்கள் ஏராளாம். அதிலும் சன் டிவி நாடகங்களுக்கு நம் முன்னோர் காலத்தில் இருந்தே அதிகம் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. அப்படி ஒளிப்பரப்பான எத்தனையோ நாடகங்கள் மக்கள் மனதில் இன்றளவும் நீங்க இடம் பிடித்துள்ளன. இதற்கு காரணம் அந்தந்த சீரியல்களின் கதாபாத்திரங்கள். அந்தவகையில், தற்போது சன் டிவியில் ஒளிப்பரப்பாகும் அனைத்து சீரியல்களின் நடிகைகளின் உண்மையான பெயர், பிறந்த தேதி, சம்பளம் குறித்த முழுத்தகவல்களையும் பார்க்கலாம்.
ப்ரீத்தி ஷர்மா | மலர்
ப்ரீத்தி ஷர்மா ஒரு இந்திய தொலைக்காட்சி நடிகை ஆவார். இவர் முதன்மையாக தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படத் தொழில்களில் பணிபுரிகிறார். 31 ஜனவரி 1999 கோயம்புத்தூரில் பிறந்த ப்ரீத்தி ஷர்மா, மாடலாக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர், 2017 ல் 'கட்டதுரைக்கு கட்டம் சரி இல்ல' என்ற தமிழ் தொலைக்காட்சி தொடர் மூலமாக சீரியல் நடிகையாக அறிமுகமானார்.
அதன்பின்னர், கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான 'திருமணம்' (2018) என்ற சீரியலில் அனிதாவாக பிரபலமானார். அதைத்தொடர்ந்து, சன் டிவியில் ஒளிபரப்பான 'சித்தி 2' என்ற தமிழ் தொலைக்காட்சி தொடரில் வெண்பாவாகவும் தனது நடிப்பை வெளிப்படுத்தினார். தமிழ் சீரியல் தவிர, சில தெலுங்கு மற்றும் ஹிந்தி சீரியல்களிலும் நடித்துள்ளார். அவர் 'The Harvest' (2020) உட்பட சில தமிழ் குறும்படங்களிலும் நடித்துள்ளார். தற்போது சன் டிவி 'மலர்' சீரியலில் மலர் ரோலில் நடித்து வருகிறார்.
நிவிஷா | பார்வதி
நிவிஷா.கே ஒரு தென்னிந்திய தொலைக்காட்சி மற்றும் திரைப்பட நடிகை ஆவார். டிசம்பர் 20, 1990 அன்று அறந்தாங்கியில் பிறந்த இவர், 'அவளுக்கென்ன அழகிய முகம்' (2018)என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கினார். கலைஞர் டிவியில் ஒளிப்பரப்பான 'தெய்வமகள்' சீரியல் மூலம் தமிழ்த் தொலைக்காட்சித் துறையில் அறிமுகமானவர் நிவிஷா, பின்னர் பொன்னுஞ்சல், தெய்வம் தந்த வீடு, ஓவியா, கங்கா, யாரடி நீ மோகினி, முள்ளும் மலரும், ஈரமான ரோஜாவே, சிவகாமி, வணக்கம் ஷ்யாமலா, கண்ணம்மா, செம்பருத்தி போன்ற பல்வேறு சீரியல்களில் நடித்து பிரபலமானவர். தற்போது, சன் டிவியில் மலர் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
சாண்ட்ரா பாபு | பவித்ரா அரவிந்த்
சாண்ட்ரா பாபு ஒரு இந்திய நடிகை, நடனக் கலைஞர் மற்றும் கேரளாவைச் சேர்ந்த மாடல் ஆவார், இவர் முக்கியமாக மலையாளத் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சித் தொடர் துறையில் பணிபுரிகிறார். 4 ஜனவரி 1998 இல் கேரளாவில் பிறந்த இவர், கருத்தமுத்து என்ற மலையாள தொலைக்காட்சி தொடரின் மூலம் நடிகையாக அறிமுகமானார். தற்போது சன் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் 'பிரியமான தோழி' என்ற சீரியலில் பவித்ரா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
பாப்ரி கோஷ் | கயல்விழி குட்டி சுந்தரம்
நடிகை மற்றும் மாடலான பாப்ரி கோஷ், தெலுங்கு, தமிழ், பெங்காலி திரைப்படங்கள் மற்றும் தமிழ் சீரியல் துறையில் பணிபுரிந்து வருகிறார். 27 ஜூலை 1990 அன்று ஹவுராவில் பிறந்த இவர், 2009 இல் பெங்காலி திரைப்படமான கால்பேலா மூலம் திரைப்படத்தில் அறிமுகமானார். பின்னர், சன் டிவியில் ஒளிப்பரப்பான 'நாயகி' என்ற சீரியல் மூலம் சீரியல் நடிகையாக அறிமுகமானார். தற்போது, மீண்டும் சன் டிவியில் ஒளிபரப்பாகும் தமிழ் சீரியலான பாண்டவர் இல்லத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர் அந்த சீரியலில் ஒரு எபிசோடுக்கு வாங்கும் சம்பளம் ரூ.35 ஆயிரம் [மாத சம்பளம் ரூ.7 லட்சம்+].
ஆர்த்தி சுபாஷ் | மல்லிகா அன்பு சுந்தரம்
தொகுப்பாளரும் நடிகையுமான ஆர்த்தி சுபாஷ், 20 அக்டோபர் 1996 சென்னையில் பிறந்தார். ஆதித்யா டிவியில் ஆங்கரிங் மூலம் தனது வாழ்க்கையைத் தொடங்கிய இவர் சன் டிவியில் பல நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கினார். பின்னர், பாப்ரி கோஷ் உடன் இணைந்து சன் டிவியில் ஒளிப்பாகும் 'பாண்டவர் இல்லம்' சீரியலில் நடித்ததன் மூலம் நடிகையாக அறிமுகமானார். இவர் அந்த சீரியலில் ஒரு எபிசோடுக்கு வாங்கும் சம்பளம் ரூ.35 ஆயிரம் [மாத சம்பளம் ரூ.7 லட்சம்+].
ஹிமா பிந்து | இலக்கியா
ஹிமா பிந்து ஒரு தொலைக்காட்சி நடிகை மற்றும் மாடல் ஆவார், இவர் முதன்மையாக தமிழ் சீரியல்களில் பணிபுரிகிறார். கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான 'இதயத்தை திருடாதே சீசன் 2' என்ற சீரியலில் முக்கிய வேடத்தில் நடித்து பிரபலமானார். 5 மே 1996 அன்று ஆந்திராவில் பிறந்த இவர், தற்போது சன் டிவியில் ஒளிப்பரப்பாகும் 'இலக்கியா' தொடரின் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
ஜோவிதா ஜோன்ஸ் | அருவி
ஜோவிதா லிவிங்ஸ்டன் ஜோன்ஸ் ஒரு இந்திய மாடல் மற்றும் நடிகை ஆவார். அவர் முக்கியமாக தமிழ் பொழுதுபோக்கு துறையில் பணியாற்றி வருகிறார். இவர் பிரபல நகைச்சுவை நடிகரும் சினிமா நடிகருமான லிவிங்ஸ்டனின் மகள் என்பதும் குறிப்பிடத்தக்கது. 28 செப்டம்பர் 1999 அன்று தமிழ்நாட்டின் சென்னையில் பிறந்த இவர், 2020 இல் சன் டிவி தொடரான 'பூவே உனக்காக' மூலம் தொலைக்காட்சியில் அறிமுகமானார். தற்போது, சன் டிவியில் அருவி சீரியலில் 'அருவி' என்ற முக்கியமான ரோலில் நடித்து வருகிறார்.
அனுஷா பிரதாப் | ஈஸ்வரி
கர்நாடகாவை சேர்ந்த மாடலும் நடிகையுமான அனுஷா பிரதாப், 1991 ஆம் ஆண்டு செப்டம்பர் 5 ஆம் தேதி கர்நாடகாவின் மங்களூரில் பிறந்தார். கன்னட தொலைக்காட்சித் தொடரான ராதா ரமணாவில் நடிகையாக அறிமுகமானார். தற்போது, சன் டிவியில் ஒளிப்பரப்பாகும் 'ஆனந்த ராகம்' சீரியலில் ஈஸ்வரியாக நடித்து வருகிறார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…