சன்டிவியில் இன்று எதிர்பாராத திருப்பங்களுடன் களமிறங்கப் போகும் சுந்தரி சீரியலின் அப்டேட்டைப் பார்க்கப் போறோம். அனுவுக்கு கார்த்திக்கப் பத்தின உண்மை தெரிஞ்சிருச்சா இல்லையா, வீட்டுல இருக்கறவங்களுக்கு எல்லாம் உண்மை தெரிஞ்சிருக்குமா? இந்த கேள்வியோடயே வாங்க இன்னைக்கான அப்டேட்டைப் பாக்கலாம்.
இன்றைய எபிசோடு: அனுவோட ஹஸ்பன்ட் கையெழுத்து போட்டா தான் ட்ரீட்மென்ட் நடக்கும்… கார்த்திக் சைன் பண்ணுவாரா..?
நேற்றைய எபிசோடில், சுந்தரி, கார்த்திக்கின் மனைவி என்று தெரியாத அனு, என் கார்த்திக்கையும் என்னையும் பிரிக்க முடியாதுனு நல்லா திட்டுறாங்க. அதுக்கு முன்னாடி, சுந்தரி வீட்டுக்கு தான் கார்த்திக் அதிகமா போறதுனாலயும், அவங்க வீட்டுல இருக்கறவங்க கூட மட்டும் நேரம் செலவிடறதுனாலயும், அனு கோவத்தோட இருக்காங்க.
இந்த நிலையில், மாலினிக்கு தாலி பிரிச்சி கோக்கிற ஃபங்ஷன்ல, அருண் ஒரு பெரிய சம்பவத்தையே செஞ்சிட்டாரு. மாலினி கழுத்துல தாலி கட்டியே தீருவனு சொல்லிட்டு இருந்த அருணோட பிளேன் எல்லாத்தையும் சுந்தரி கண்டுபிடிச்சி, கடைசியில பெரிய ட்விஸ்டோட முடிச்சாங்க.
இதெல்லாம் நடந்துட்டு இருக்கும் போது, கார்த்திக்கு திடீர்னு வலிப்பு வந்துருச்சி. இது அனுவுக்கும் தெரிஞ்சி, கார்த்திக்க பாக்குறதுக்கு ஹாஸ்பிட்டல் வராங்க. ஆனால், ஹாஸ்பிட்டல்ல கார்த்திக்கோட குடும்பம் எல்லாரும் இருக்காங்க. சுந்தரி அனுவ எவ்ளோ தடுத்தும், ஹாஸ்பிட்டல் உள்ள போய் கார்த்திய பாக்கப் போறாங்க. அப்ப தான் அனுவோட அம்மா என்ட்ரியாகுறாங்க.
அடுத்து என்ன நடக்கும்னு ஆவலோடு பாத்துட்டு இருந்த நேரத்துல, இன்னைக்கான ப்ரோமோல அனுவோட உயிருக்கு ஆபத்துனு சொல்றாங்க. அனுவுக்கு எல்லா உண்மையும் தெரிஞ்சதுனால கூட அனுவுக்கு ஹெல்த் ப்ராப்ளம் வந்து அட்மிட் பண்ணிருக்கலாம். அதுவும் இல்லாம, அனுவுக்கு குழந்தை பொறக்கப் போறப்ப கவனமா இருக்கணும்னு சொல்லிருக்காங்க. உண்மையாவே அணுவுக்கு உண்மை தெரிஞ்சி மயக்கம் வந்துதா…? இல்ல கார்த்திக் மேல இருக்க அன்புனால, கார்த்திக்க பாத்துட்டு மயக்கம் வந்துருக்குமானு வெயிட் பண்ணி பாப்போம்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…