தினந்தோறும் பரபரப்பான சூழ்நிலையில், அடுத்து என்ன ஆகும் என்ன ஆகும் என காண்போரை புலம்ப வைக்க தள்ளும் சுந்தரி சீரியலில் இன்று என்ன நடக்கப் போகுது என்பதைப் பார்ப்போம் வாங்க.
ஒரு வாரமாகவே, அனுவுக்கும், அனு வயித்துல இருக்கும் குழந்தைக்கும் பிரச்சனை வரப் போகுதுனு எல்லாரும் ரொம்ப வருத்தத்துல இருக்காங்க. ஒவ்வொரு நாளும் அனு கண்ண முழிச்சி பாப்பாங்களா, பேசுவாங்களானு கார்த்திக் வெயிட் பண்ணிட்டு இருக்காரு. அனுவோட அம்மா கார்த்திக் மேல செம கோவமா இருக்காங்க. இவன கல்யாணம் பண்ணதுனால தான் என் பொண்ணு இப்படி இருக்கானு கார்த்திக்க போட்டு வறுத்து எடுக்கறாங்க. ஆனா, கார்த்திக்கு இது வேணும்.
சுந்தரியோட வாழ்க்கை மட்டுமல்லாம, இப்ப அனுவோட வாழ்க்கையும் சிக்கல்ல இருக்க கார்த்தி தான் காரணமா இருக்காப்ல. இது ஒரு பக்கம் இருக்க, சுந்தரியோட வீட்டுக்கே வந்து போலீஸ்ட இருந்து தப்பிச்சி அருண், கிருஷ்ணாவ கொல்ல முயற்சி பண்றான். போலீஸ்கிட்ட இருந்து தப்பிச்சி எப்படியும் சுந்தரி வீட்டுக்கு வருவானு, அங்க போலீஸ் பாதுகாப்பு குடுத்துருக்காங்க. அதே மாறியே அருண், சுந்தரியோட வீட்டுக்கு வர, போலீஸ பாத்துட்டு ஒழிஞ்சி நின்றான். இத, பழனி கூட இருக்கவன் பாத்துட்டு, அவனும் அருண பாத்துட்டு இருக்கான்.
நேரம் பாத்து கரெக்டா சுந்தரியோட வீட்டு சுவர் ஏறி அருண் உள்ள குதிச்சிடுறான். கொஞ்சம் நேரத்துலயே, பழனி அவன பாத்துட்டு முருகன்ட சொல்றான். அத கேட்ட அருண் அங்க இருந்து தப்பிச்சிடுறான். உடனே முருகனும், மைக்செட் பழனியும் அருண துறத்திட்டு ஓடுறாங்க.
இதே சமயத்துல, இன்னைக்கு அனுவோட ட்ரீட்மென்ட் ரிசல்ட் வந்துருச்சினு டாக்டர் சொல்றாங்க. இத நனைச்சி எல்லாருமே பயந்துட்டு இருக்காங்க. டாக்டர் சொன்னத கேட்டு எல்லாரும் ஷாக் ஆகி நிக்கிறாங்க. சுந்தரியும் கண் கலங்கிட்டே சாமிக்கிட்ட போய் வேண்டுறாங்க. எங்க குடும்பத்துக்கு மட்டும் ஏன் இப்படி எல்லாம் நடக்குதுனு ரொம்ப கஷ்டப்படுறாங்க. கோவில்லயே மயக்கம் போட்டு விழுந்துடுறாங்க. அப்படி டாக்டர் என்ன சொல்லிருப்பானு நீங்க நினைக்கிறீங்க…
சுந்தரியோட அழுகைய பாக்கும் போது அனுவோட உயிருக்கு ஆபத்தா இருக்கலாம். இல்லைனா, அனுவுக்கு பிறக்கப்போற குழந்தையின் உயிருக்கு ஆபத்தா இருக்கலாம். இதுல என்ன நடக்கப் போகுதுனு வெயிட் பண்ணி பாக்கலாம்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…