சுந்தரிக்கு அணு குடுத்த நெக்லஸ, யாரு சொல்லி அவன் திருடிருப்பானு சுந்தரி கண்டுபிடிச்சிட்டு இருக்கா. அதே நேரம் மாலினிக்கு தாலி பிரிச்சி கோக்கிற ஃபங்ஷனும் நடத்த பிளேன் பண்ணீட்டு இருக்காங்க. இதுல பிரச்சனை பண்ண, அருண் ரெடியாகிட்டு இருக்கான். இப்படி இருக்கும் போது, சுந்தரி மாலினியோட பிரச்சனை தீர்க்கப் போறாங்களா..? இல்ல நெக்லஸ திருட சொன்னவங்கள கண்டுபிடிக்கப் போறாங்களானு பாக்கலாம்.
எத்தனையோ பிரச்சனைகளுக்கு அப்றம், சுந்தரி மாலினியோட கல்யாணத்தை நடத்தினாலும், அருண் பிரச்சனை பண்ண ரெடியா இருக்காங்க. இதுல அணுவுக்கு கார்த்திக் கிஃப்ட்-ஆ குடுத்த நெக்லஸ சுந்தரிக்கு அணு குடுத்தத, அத கார்த்தியே திருட சொல்லிருக்கான்.
அருணும், அவனோட ஆளுங்களும், பழனிட்ட சவால் விட்டுட்டு போயிருக்காங்க… மாலினியோட தாலி பிரிச்சி கோக்கிற ஃபங்ஷன்ல, பிரச்சனை பண்ணி, மாலினிய திரும்ப கல்யாணம் பண்ண பிளேன் பண்ணிருக்கான்.
சுந்தரி, இன்னொரு பக்கம் அந்த நெக்லஸ யாரு திருட சொல்லிருப்பானு கண்டுபிடிக்க முயற்சி பண்றப்போ, கார்த்திக் மேல தான் சந்தேகம் வரும். ஆனா, இதுக்கு சரியான ப்ரூஃப் இருக்காது. இந்த சமயத்துல முருகனுக்கு அணுவோட கணவரப் பத்தி தப்பா நினைச்சிட்டு இருப்பாரு. அணு மேல சுந்தரி குடும்பமும் சரி, சுந்தரியும் சரி ரொம்ப பாசம் வச்சிருப்பாங்க. இதனால், அணுவோட வீட்டுக்குப் போய் புதுசா பாத்திரங்கள் எல்லாம் வாங்கிட்டுப் போக பேசிட்டு இருப்பாங்க. இதுக்கு கார்த்தி இதெலாம் தேவையில்லாத வேலைனு சொல்ல, சுந்தரி இதுக்கு நம்ம எல்லாரும் அவங்க கூட தான் இருக்கோம்னு காட்றதுக்கு தான் இதுனு சொல்லுறாங்க.
இதுக்கு அப்றம், கார்த்திக்க பாக்றதுக்கு, நெக்லஸ திருட ஊர்க்காரன் வந்து எல்லா உண்மையை ஜன்னல்கிட்ட பாத்து சொல்லிட்டு இருப்பான். இத சுந்தரி கேட்ட அப்றம் உணமை எல்லாம் தெரிஞ்சிடும். இதுக்கு மேல கார்த்திக்க விட்டு வெக்க போறாங்களா..? இல்ல முருகன் கிட்ட கார்த்திக் பத்திய உண்மை எல்லாத்தையும் சொல்லப் போறாங்களானு வெயிட் பண்ணி பாப்போம்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…