நடிகர் சூர்யா நடிப்பில் தயாராகி வரும் சூர்யா 42 படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.
சூர்யா மற்றும் திஷா பதானி நடித்து வரும் சூர்யா 42 படத்தின் மோஷன் போஸ்டர் கடந்த செப்டம்பரில் வெளியானது. படத்தின் முதல் ஷெட்யூல் ஷூட்டிங் கோவாவில் நடந்து முடிந்துள்ளது.
இந்நிலையில், படத்தின் இரண்டாம் கட்ட ஷூட்டிங் வரும் அக்டோபர் 26 முதல் சென்னை மற்றும் புதுச்சேரியில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.
சூர்யாவும் திஷாவும் இதில் கலந்து கொள்வார்கள் என்றும், இங்கு ஷூட்டிங் முடிந்த பின்னர், அடுத்தகட்ட படப்பிடிப்பு வெளிநாட்டில் தொடங்கும் என்றும், மூன்று வெவ்வேறு நாடுகளில் படப்பிடிப்பை நடத்த உள்ளதாக படக்குழு வட்டாரங்களில் கூறப்படுகிறது.
இதில் குறிப்பிடத்தக்க விஷயமாக சூர்யா 42 இரண்டு பாகங்களாக தயாராகும் நிலையில், முதல் பாகம் 160 முதல் 170 நாட்கள் வரை படமாக்கப்படும் என்றும் முதல் பாகம் வெளியான பின்னர் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு தொடங்கப்படும் என்று கூறப்படுகிறது.
இந்த படத்தை சூர்யாவின் உறவினர் ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீன், யுவி கிரியேஷன்ஸுடன் இணைந்து தயாரிக்கிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…