தமிழ் சினிமாவின் முன்னணி நாயகர்களில் ஒருவரான சூர்யா, தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படம் மிகப் பெரிய பொருட்செலவில் உருவாக்கப்பட்டு வருகிறது. உலக அளவில் படத்தை வெளியிடவும் முடிவு செய்துள்ளனர். தமிழ், தெலுங்கு, ஹிந்தி உட்பட மொத்தம் 10 மொழிகளில் வெளியாகவுள்ளது படம்.
இந்த படத்தை முடித்துக் கொண்டு வாடிவாசல் படத்துக்கு செல்வார் என இதுவரை நினைத்துக் கொண்டிருந்த வேளையில், சூர்யாவும் சுதாகொங்கராவும் மீண்டும் இணையும் படத்தைப் பற்றிய தகவல் வெளியாகியிருக்கிறது. சுதாகொங்கரா படத்தை முடித்த பிறகே மற்ற படங்களுக்கு கால்ஷீட் கொடுப்பார் என பேச்சு அடிபடுகிறது. சூரரைப் போற்று படத்தின் மாபெரும் வெற்றி இவர்களது கூட்டணியை எதிர்பார்த்து ரசிகர்களை காத்திருக்க வைத்துள்ளது.
வாடிவாசல் படம் நிச்சயமாக நடக்கும் ஆனால் இப்போதைக்கு இல்லை என்பதுபோல தகவல் வெளிவந்துள்ளது. அநேகமாக இதன் படப்பிடிப்பே அடுத்த ஆண்டுதான் துவங்கும் என்பது போல கூறப்படுகிறது. அதற்குள் சூர்யா சுதாகொங்கரா படம், ரவிக்குமார் படம், லோகேஷ் கனகராஜின் கைதி 2 ஆகிய படங்களில் நடித்து முடித்துவிடுவார் என்கிறார்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…