Sat ,Apr 20, 2024

சென்செக்ஸ் 73,088.33
599.34sensex(0.83%)
நிஃப்டி22,147.00
151.15sensex(0.69%)
USD
81.57
Exclusive

லேட்டஸ்ட் தமிழ் திரைப்படங்களை இலவசமாக டவுன்லோடு செய்வது எப்படி? | Tamilrockers New Tamil Movie Download

Nandhinipriya Ganeshan Updated:
லேட்டஸ்ட் தமிழ் திரைப்படங்களை இலவசமாக டவுன்லோடு செய்வது எப்படி? | Tamilrockers New Tamil Movie Download Representative Image.

Tamilrockers.com என்பது தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் பாலிவுட் திரைப்படங்கள், வெப் சீரிஸ் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் நகல்களை இலவசமாக டவுன்லோடு செய்யவும், ஆன்லைனில் பார்க்கவும் அனுமதிக்கும் டொரண்ட் [சட்டவிரோதமான] இணையதளம் ஆகும். அதாவது, தியேட்டர்களில் ரிலீஸான எந்த படங்களாக இருந்தாலும் சில மணிநேரங்கள் அல்லது நாட்களுக்குள் இந்த இணையத்தளத்தின் வழியாக எளிதில் டவுன்லோடு செய்துக் கொள்ளலாம். 2011 ஆம் ஆண்டு மூன்று நபர்களால் நிறுவப்பட்ட இந்த இணையதளம் தற்போதுவரை பெரும்பாலான மக்களின் ஃபேவரைட் இணையதளமாகவும் இருந்து வருகிறது. 

அதுமட்டுமல்லாமல், தமிழ்ராக்கர்ஸ் அனைத்து திரைப்படங்களின் டப்பிங் பதிப்புகளையும் வழங்குகிறார்கள். குறிப்பாக, ஆங்கிலம் பேச தெரியாத பார்வையாளகளுக்கு தங்களுடைய சொந்த மொழியில் படங்களை டவுன்லோடு செய்து கொள்ளவும், ஆன்லைனில் பார்வையிடவும் உதவுகிறது. ஆனால், தமிழ்ராக்கர்ஸ் இலவசமாக டவுன்லோடு செய்ய அனுமதிப்பதால் திரைப்படங்களின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் பாதிக்கப்படுகிறது. இதனால், பல முறை இந்த இணையதளத்தை இந்திய அரசாங்கம் தடை செய்துள்ளது. இருப்பினும், புதிய டொமைன் பெயர்கள் மற்றும் இணையதளம் மூலமாக தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

தமிழ்ராக்கர்ஸின் ஒரு அம்சம் என்னவென்றால், பயனர்கள் திரைப்படங்களை அளவின் அடிப்படையில் டவுன்லோடு செய்து கொள்ள அனுமதிக்கிறது. இதனால், பயனர்கள் குறைந்த டேட்டா மூலமாகவும் டவுன்லோடு செய்துக் கொள்ளலாம். அந்தவகையில், 300எம்பி, 700எம்பி, 1ஜிபி, 2ஜிபி அல்லது அதற்கு மேற்பட்ட அளவிலும் டவுன்லோடு செய்துக் கொள்ளலாம். தமிழ்ராக்கர்ஸ் அவ்வப்போது தனது ஸ்பேஸ் பெயரையும், URLஐயும் மாற்றி, நிபுணர்களை ஏமாற்றி, தளத்தை தொடர்ந்து இயக்கி வருகிறது. 

இதனால் பயனர்கள் இணையதளத்தை கண்டுபிடிப்பது மிகவும் கடினம். இருப்பினும், இதுபோன்ற இணையதளங்களில் இருந்து திரைப்படங்களைப் பதிவிறக்குவது உங்களுடைய லேப்டாப் அல்லது மொபைல் சாதனங்களை மால்வேர் மற்றும் பிற பாதுகாப்பு அபாயங்களுக்கு ஆளாக்கும். இந்த தளங்களில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட கோப்புகளில் லேப்டாப் அல்லது மொபைல் சாதனத்திற்கு தீங்கு விளைவிக்கும் வைரஸ்கள் அல்லது பிற தீங்கு விளைவிக்கும் மென்பொருள்கள் இருக்கலாம்.

எனவே, இம்மாதிரியான தளங்களிலிருந்து டவுன்லோடு செய்வதை தவிர்ப்பது நல்லது. ஆன்லைனில் திரைப்படங்களை பார்க்கவும், டவுன் செய்யவும் பல சட்டப்பூர்வமான தளங்கள் உள்ளன. அதன்படி, நெட்ஃபிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ, டிஸ்னி+ஹாட்ஸ்டார் போன்றவை சட்டப்பூர்வமான ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளங்கள் ஆகும். இந்த சேவைகள் மூலம் உயர்தர வீடியோ மற்றும் ஆடியோவுடன் மலிவு விலையில் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்க்கலாம். 

Important: தமிழ்ராக்கர்ஸ் அல்லது வேறு ஏதேனும் திருட்டு இணையதளத்தில் இருந்து திரைப்படங்களைப் பதிவிறக்குவது சட்டவிரோதமானது என்பதையும், அத்தகைய இணையதளங்களில் இருந்து பதிப்புரிமை பெற்ற உள்ளடக்கத்தை அணுகுவது சட்டரீதியான விளைவுகளுக்கு வழிவகுக்கும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்