பீஸ்ட் படத்தின் வெளியீட்டைத் தொடர்ந்து உடனடியாக நெல்சன் திலீப்குமாரின் அடுத்த படம் ஒப்பந்தமானது. சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் தலைவர் 169 படத்தை இயக்கவுள்ளார் நெல்சன் திலீப்குமார்.
ரஜினிகாந்த் படம் என்றாலே அந்த படத்தின் இயக்குநருக்கு பெரிய வெளிச்சம் கிடைக்கும். அந்த வகையில் பீஸ்ட் திரைப்படம் பெரிய அளவில் வெற்றி பெறாவிட்டாலுமே நெல்சன் மீது அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஏற்கனவே ரஜினிகாந்த் - சன்பிக்சர்ஸ் கூட்டணியில் வெளியான அண்ணாத்த திரைப்படம் பெரிய அளவில் சோபிக்காவிட்டாலும் குடும்பங்கள் கொண்டாடும் வெற்றியாக விளம்பரப்படுத்தப்பட்டது.
ரஜினிகாந்த் - சன்பிக்சர்ஸ் - நெல்சன் ஆகியோரின் முந்தைய படங்கள் மீது பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருந்தும் அதை சரியாக நிறைவேற்றாத நிலையில், அடுத்த படத்தின் வியாபாரம் டல் அடித்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் உள்ளே இன்னொரு விசயத்தை இணைத்துள்ளனர்.
வழக்கமாக ரஜினி படங்களில் ரஜினி மட்டுமின்றி ஹீரோயினாக ஜோதிகா, நயன்தாரா, ஐஸ்வர்யா ராய் என அந்தந்த சமயத்தில் பெரிய அளவில் பேசப்படும் கதாநாயகிகளும், வடிவேலு, சந்தானம் போன்ற மிகப் பெரிய அளவில் பெயர் பெற்ற காமெடி நடிகர்களும், வில்லனாக அக்ஷய் குமார், சுனில் ஷெட்டி உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்களும் இருப்பார்கள். படத்தின் வியாபாரத்துக்காக இப்படி ஒரு ஏற்பாடு இருக்கும்.
ஆனால் நெல்சன் வெறும் நயன்தாரா, யோகிபாபு, சிவகார்த்திகேயன், விஜய் ஆகியோரை தனித்தனியாக கொண்டே பெரிய அளவில் ஹிட் கொடுத்தவர். பீஸ்ட் விமர்சன ரீதியாக சுமார் என்றாலும் வசூலில் கெட்டியாகத்தான் இருந்தது. இப்படி இருக்க இந்த முறை நெல்சனும் சரி ரஜினிகாந்தும் சரி விட்டு விடக்கூடாது என்பதை புரிந்துகொண்டிருக்கிறார்கள்.
ஏற்கனவே விக்ரம் திரைப்படம் பெற்ற வெற்றியைப் போல, அதை விட அதிகமாக வெற்றியைத் தன்வசப்படுத்தவேண்டும் என குறிக்கோளுடன் காத்திருக்கிறார்கள். சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் சமீபத்தில் வெளியான எந்த படமும் கதையம்சம் கொண்டதாக இல்லை.
கே எஸ் ரவிக்குமார் ஸ்க்ரிப்டில் கில்லாடி. மசாலா படங்களில் அவரை அடித்துக் கொள்ள ஆள் இல்லை. அவருக்கான இடத்தைக் கொடுத்தால் பின்னி பெடலெடுப்பார் என்கிறார்கள். மற்றவர்களுக்கு எப்படியோ ரஜினி, கமலுக்கு கே எஸ் ரவிக்குமார் எப்போதும் வெற்றியின் திறவுகோல்தான்.
நெல்சன் இயக்கும் பணியை மட்டுமே செய்யவுள்ளாராம். படத்தில் ரஜினிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராய், பிரியங்கா அருள் மோகன், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் நடிக்கவுள்ளார்கள். ரஜினிக்கு வில்லனாக கன்னட நடிகர் ஷிவ்ராஜ்குமார் நடிக்கவுள்ளார். இந்த படத்துக்காக ரஜினிக்கு மாஸ் பின்னணி இசை, தெறிக்கும் பாடல்கள் என திட்டமிட்டுள்ளார் இசையமைப்பாளர் அனிருத்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…