பீஸ்ட் திரைப்படத்தைத் தொடர்ந்து நெல்சன் திலீப்குமார் இயக்கும் அடுத்த படம், தலைவர் 169. பீஸ்ட் திரைப்படம் வெளியாவதற்கு முன்னரே சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் படத்தை இயக்க ஒப்பந்தமானார். இடையில் பீஸ்ட் ட்ரோல் நெல்சன் இந்த படத்திலிருந்து நீக்கப்பட்டார் என பேசப்பட்டாலும், தலைவர் 169 படத்தின் ஸ்க்ரிப்டை செதுக்கி வருகிறார் நெல்சன்.
நெல்சனுக்கு மேற்பார்வை மற்றும் உதவியாக கே எஸ் ரவிக்குமார் படத்தில் இருப்பதால், ரஜினிக்கு மாஸான படமாக இது அமையும் என கூறப்படுகிறது. படத்தின் கதைப்படி, ரஜினி ஜெயிலராக வருகிறாராம்.
ஜெயில் மற்றும் கைதிகள் தொடர்பான கதையாக இது இருக்குமாம். இதனால் படத்துக்கு ஜெயிலர் என பெயர் வைத்துள்ளனராம். விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது.
விக்ரம் திரைப்படம் உலக அளவில் வசூல் மழை பொழிந்து வருவதால், அதற்கு நிகரான வெற்றியைப் பெறவேண்டும் என ரஜினிகாந்த் நினைக்கிறார். இதனாலேயே நெல்சன் திலீப் குமாரை மட்டுமே நம்பாமல், உடன் தனது நண்பரான கே எஸ் ரவிக்குமாரையும் இணைத்துள்ளார். சன் பிக்சர்ஸ்க்கும் கடந்த சில படங்கள் தோல்வி என்பதால் இந்த முறை மிகப் பெரிய வெற்றியைச் சுவைக்க காத்திருக்கிறது.
தலைவர் 169 படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக ஐஸ்வர்யா ராய் நடிக்கவுள்ளார். இதனால் ஹிந்தி பெல்ட்டில் நல்ல வியாபாரம் செய்யலாம். ரம்யா கிருஷ்ணன் படத்தில் இருப்பதால் தெலுங்கு ஸ்டேட்டிலும் நல்ல வசூல் செய்ய முடியும். ப்ரியங்கா அருள் மோகன் தமிழில் நல்ல வரவேற்பை பெற்ற நடிகை. கன்னடத்திலிருந்து சிவராஜ்குமார் வில்லனாக நடிக்கவிருப்பதால் அங்கும் வசூல் குவியும் என கணக்கு போடுகின்றனர் ரஜினி தரப்பினர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…