பீஸ்ட் படத்துக்கான எதிர்பார்ப்பு மிக அதிகமாக இருந்த நிலையில், பெரிய வரவேற்பை பெறவில்லை என்றாலும், வசூலில் லாபம் சம்பாதித்து கொடுத்தது என்னவோ உண்மைதான். ஆனால், படம் இன்னமும் சிறப்பாக வரவேண்டும் என விஜய் நல்ல இயக்குநர்களாக பார்த்து பொறுப்பை ஒப்படைக்கிறாராம். இந்நிலையில், ஏற்கனவே மாஸ்டர் திரைப்படத்தை எடுத்த லோகேஷ் கனகராஜுடன் சேர்ந்து தளபதி 67 படத்தை எடுக்க முடிவு செய்துள்ளாராம்.
இதுகுறித்து இண்டர்வியூவில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் கூறாமல் மழுப்பி வரும் லோகேஷ், விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்போடு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. விக்ரம் படம் முடிந்துவிட்டதால், இன்னும் 20 நாட்களுக்கு கொஞ்சம் ரிலாக்ஸாக இருந்துவிட்டு, ஜூன் 22ம் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்போடு பணியைத் துவங்குவார் என்றே தெரிகிறது.
வழக்கமாக ஸ்க்ரிப்ட் எழுதும் பணிக்காக அதிக நேரம் எடுத்துக் கொள்கிறார் லோகேஷ். விஜய்க்காக எழுதும் கதையிலும் இன்னும் நேரம் எடுத்து பொறுமையாக நல்ல படத்தைத் தருவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இதுவரை லோகேஷ் செய்திராத ஒரு விசயத்தை அடுத்த விஜய் படத்தில் செய்யவுள்ளாராம்.
தளபதி 67 படத்தில் ஹீரோயின் இருக்கிறாராம். இன்னும் எத்தனை படங்கள்தான் ஹீரோயின் இல்லாமலே பண்ணுறது. இப்ப ஹீரோயினையும் சேர்த்துக்கலாம் என முடிவு செய்துவிட்டார் போல. விஜய்க்கு ஜோடியாக இம்முறை சமந்தாவை நடிக்க வைக்கலாமா என ஆழ்ந்த யோசனையில் இருக்கிறார்களாம். ஒருவேளை இது நடந்தால், தெறி, கத்தி, மெர்சல் திரைப்படங்களுக்குப் பின் 4வது படமாக இது அமையும்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…