தளபதி 67 படத்தின் டைட்டில் அறிவிப்பை வரும் ஜனவரி 26ம் தேதி குடியரசு தினத்தில் படக்குழு வெளியிட இருப்பதாக இணையதளங்களில் தகவல்கள் உலா வருகின்றன. இதுகுறித்த உண்மைத் தன்மையை அறிய முற்பட்டோம். இதில் பாதி உண்மையும் மீதி பொய்யும் கலந்து இருப்பதாக தகவல் கிடைத்தது.
வம்சி இயக்கத்தில் தளபதி விஜய் நடித்த வாரிசு திரைப்படம் பொங்கல் சிறப்பாக திரையரங்குகளுக்கு வந்து கலவையான விமர்சனங்களைப் பெற்றது. குடும்பங்கள் கொண்டாடும் படமாக அமைந்த வாரிசு திரைப்படத்தைத் தொடர்ந்து இளைஞர்களுக்கு பிடித்த விதத்தில் தனது ஆஸ்தான இயக்குநர்களான லோகேஷ் கனகராஜுடனும் அட்லீயுடனும் அடுத்தடுத்து செய்ய திட்டமிட்டுள்ளார் தளபதி விஜய்.
தளபதி 67 திரைப்படத்தை ஏற்றுக்கொள்ள முன்னரே கையெழுத்து போட்டுவிட்டதால் இந்த படத்தை அவசர கதியில் துவக்கிவிட்டனர். ஆனாலும் படத்தை தங்கள் வேகத்துக்கு ஏற்ற வகையிலே கொண்டு செல்ல விஜய் அனுமதி வழங்கிவிட்டார். இந்நிலையில், படத்தை கொஞ்சம் பொறுமையாகவே தயார் செய்து வரும் தீபாவளிக்கு திரைக்கு கொண்டு வரலாம் என திட்டமிட்டு ஜனவரி 4ம் தேதியே படப்பிடிப்பைத் துவங்கிவிட்டனர்.
இந்நிலையில், வரும் குடியரசு தினத்தில் இந்த படத்தின் டைட்டில் வரும் என சில தகவல்கள் சுற்றி வருகின்றன. அவற்றில் உண்மை இல்லை எனவும், ஆனால் ஜனவரி முடிவதற்குள் தளபதி 67 படத்தைப் பற்றிய ஒரு முக்கிய அப்டேட் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது. அது டைட்டில் இல்லை ஆனால் விஜய்யின் லுக்காக இருக்கலாம் என்கிறார்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…