லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது. தொடக்கம் முதல் முடிவு வரை முழுக்க முழுக்க சூப்பரான திட்டத்துடன் களம் இறங்கியிருக்கிறார் லோகேஷ்.
பக்காவாக பிளான் போட்டு அத்தனை விசயங்களையும் பிரித்து கொடுத்து சூப்பராக படத்தை எடுத்து கையில் கொடுக்க முடிவு செய்துள்ளாராம். மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் என நான்கு படங்களை இயக்கிவிட்டு 5வதாக விஜய்யுடன் மீண்டும் இரண்டாவது முறை கைக்கோர்த்துள்ளார். இந்த முறை மிகப் பெரிய படமாக அமையவுள்ளது தளபதி 67. செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் லலித்குமார் இந்த படத்தை தயாரிக்கிறார்.
விஜய் நடிப்பில் வாரிசு திரைப்படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகவுள்ள நிலையில், அவரின் அடுத்த படமான தளபதி 67 தீபாவளிக்கு வெளியிடும் நோக்கில் அதி தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.
சென்னையில் ஜனவரி 2ம் தேதி முதல் துவங்கிய படப்பிடிப்பு வரும் 15ம் தேதி வரை நடைபெறுகிறதாம். முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு, காஷ்மீர் செல்ல இருக்கிறார்களாம். அங்கு 50 நாட்கள் வரை படப்பிடிப்பு நடத்தி முடித்துவிட்டு மும்பையில் சில இடங்களில் படப்பிடிப்பு இருக்கிறதாம். இப்படி முழுக்க முழுக்க திட்டம் தீட்டி பக்காவான திட்டத்துடன் செல்கிறார்கள் தளபதி 67 படக்குழுவினர்.
மே மாதம் முடிவதற்குள் படப்பிடிப்பை முடித்துவிட்டு ஆயுதபூஜை விடுமுறை தினங்களிலேயே படத்தை முடித்து கையில் கொடுத்து விட திட்டமிட்டுள்ளார் லோகேஷ் கனகராஜ். தீபாவளியிலிருந்து கைதி படப்பிடிப்புக்கு செல்லவும் திட்டம் இருக்கிறதாம்.
இதையெல்லாம் கேட்டு தெரிந்துகொண்ட விஜய், அடடே வேற லெவல் போங்க என பாராட்டியிருக்கிறார். கமல்ஹாசன், கார்த்தி, விஜய் என இவர்கள் மூவர் பட்டியலிலும் நல்ல பெயரைப் பெற்றுவிட்டார் லோகேஷ் கனகராஜ். எப்போது கேட்டாலும் தேதி கிடைக்கும் என்கிற அளவுக்கு நெருக்கமாகிவிட்டார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…