Sat ,Jul 20, 2024

சென்செக்ஸ் 80,604.65
-738.81sensex(-0.91%)
நிஃப்டி24,530.90
-269.95sensex(-1.09%)
USD
81.57
Exclusive

தளபதி 68 படத்தை இயக்கப்போவது இவரா? | Thalapathy 68 Director

UDHAYA KUMAR Updated:
தளபதி 68 படத்தை இயக்கப்போவது இவரா? | Thalapathy 68 Director Representative Image.

வாரிசு, தளபதி 67 படங்களைத் தொடர்ந்து தளபதி 68 படத்தை இயக்கப் போவது யார் என்பது தெரியவந்துள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இப்போது வெளியாகாது என்றாலும், உறுதியான தகவல்தான் இது என்கிறார்கள் நம்பத் தகுந்த வட்டாரத்தினர். 

அட்லீ, ப்ரியா தம்பதிக்கு விரைவில் குழந்தை பிறக்கப்போகிறது. அதற்கான வளைகாப்பு நிகழ்ச்சி கடந்த வாரம் நடைபெற்றது. இதில் அட்லீயின் ஆருயிர் அண்ணனான தளபதி விஜய்யும் கலந்து கொண்டார். அவர்களுக்கு அன்பு பரிசையும் அளித்து அவர்களை மகிழ்ச்சியுறச் செய்தார். 

இந்நிலையில்தான், அட்லீ - பிரியா இணைக்கு மற்றுமொரு இன்ப அதிர்ச்சியாக மீண்டும் அட்லீ - விஜய் கூட்டணி இணைவது உறுதியாகியுள்ளது. 

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில்  விஜய் தனது 68வது படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார். இந்த படத்தை இயக்கவிருப்பது அட்லீதான். 400 கோடி பொருட் செலவில் தயாரிக்கப்படவுள்ள இந்த படத்தில் அட்லீக்கு 50 கோடி சம்பளம் கொடுக்கப்படுவதாக தகவல். இந்த படத்தின் மூலம் தளபதி விஜய் 150 கோடி சம்பளம் பெறவிருக்கிறாராம். 2023 தீபாவளிக்கு பிறகு இந்த படம் துவங்கும் என்று கூறப்படுகிறது. 

இந்த படம் குறித்த அடுத்தடுத்த அப்டேட்களுக்கு நமது Search around web இணையதளத்துடன் இணைந்திருங்கள். 
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்