விஜய் பற்றிய கேள்விக்கு தளபதி ஐயா என அழைத்தது குறித்து கமல்ஹாசன் கூறியுள்ளார். இதனால்தான் அவர் தளபதி ஐயா என கூறியிருப்பதாக விஜய் ரசிகர்கள் அந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.
உலகநாயகன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் திரைப்படம் உலக அளவில் மிக பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. ஒவ்வொரு நாளும் படத்தின் வசூல் எகிறிக் கொண்டே இருக்கிறது. உலகம் முழுக்க 200 கோடி, தமிழகத்தில் 100 கோடி என பல திரைப்படங்களின் சாதனைகளை முறியடித்து முன்னேறி வருகிறது விக்ரம் திரைப்படம்.
கமல்ஹாசனுடன், விஜய் சேதுபதி, பகத் பாசில், சூர்யா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மேலும் லோகேஷ் கனகராஜ் அடுத்து விஜய்யை வைத்து படம் பண்ண உள்ளார் என்பதால் விஜய், சூர்யா ரசிகர்களும் படத்துக்கு சப்போர்ட் செய்துள்ளனர்.
படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜுக்கு கார் ஒன்றை பரிசாக அளித்தார் கமல்ஹாசன். மேலும் அவரது உதவி இயக்குநர்களுக்கு ஆளுக்கொரு பைக் வாங்கி கொடுத்து அசத்தினார். நேற்று நடிகர் சூர்யா வீட்டுக்கு சென்று அவரையும் அவரது தந்தை சிவகுமாரையும் சந்தித்த கமல்ஹாசன், சூர்யாவுக்கு தனது நெருக்கமான ரோலெக்ஸ் வாட்சை பரிசாக கொடுத்துள்ளார்.
இந்நிலையில், இன்று படத்தின் வெற்றிக்காக பத்திரிகையாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழாவில், பல கேள்விகள் கேட்கப்பட்டது. அதில் பதிலளித்த கமல்ஹாசன், தளபதி ஐயா என ஏன் கூறினேன் என்பது குறித்து தெரிவித்திருந்தார்.
என்னை சிவாஜி அவர்கள் கமல் ஐயா என அழைத்தார். அதேபோல்தான் தான் விஜய்யை தளபதி ஐயா என அழைத்தேன். நேரம் வந்தால் விஜய்யுடன் இணைவேன் எனவும் தெரிவித்திருந்தார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…