சிறுத்தை படத்தின் மூலம் தமிழகத்தில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் சிவா. இவர் அஜித்துடன் சேர்ந்து 4 படங்களை அடுத்தடுத்து இயக்கி தமிழகத்தின் முக்கிய இயக்குநர் பட்டியலில் இடம்பிடித்தார். அதில் வீரம், விஸ்வாசம் தவிர மற்ற இரண்டு படங்கள் சுமாராகவே வரவேற்பை பெற்றன. இந்நிலையில், அஜித் ரசிகர்களே சிறுத்தை சிவா வேண்டாம் என கேட்க, சமூக வலைத்தளமே களேபரமாகிப் போன கதையெல்லாம் உண்டு.
விக்ரம் ப்ளாக்பஸ்டர் ஹிட்! அவரே சொல்லிட்டார்...
சிறுத்தை சிவாவுக்கு பிறகு அடுத்த ஹெச் வினோத்தோடு அடுத்தடுத்து 3 படங்களில் இணைந்துள்ளார் அஜித். இப்படி ஒரு பக்கம் போய்க்கொண்டிருக்க, விஜய் அட்லீ இயக்கத்தில் அடுத்தடுத்து படங்களில் நடித்தார். இப்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்தவர், அடுத்தும் இன்னொரு படத்தில் இணையவுள்ளாராம். இதற்கிடையில்தான், விஜய்யுடன் சிறுத்தை சிவா சந்திப்பு நடைபெற்றது.
விஜய்யும் சிறுத்தை சிவாவும் விரைவில் இணையவுள்ளதாகவும், அவர்கள் இணையும் படம் வரலாற்று சம்பந்தப்பட்ட படமாகவும் இருக்கும் என தகவல் வெளியாகியிருந்தது. இப்போது இது உறுதியாகும் வகையில் தகவல் பரவி வருகின்றது. இதனால் அஜித் ரசிகர்கள்தான் குஷியாக உள்ளனர். சிவாவை எப்படியெல்லாம் கலாய்த்தீர்கள். இப்போது படுங்கள் என்பது போல பேசி வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…