தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கி, ரசிகர் பட்டாளத்தையே வைத்திருப்பவர் தளபதி “விஜய்”. தற்போது, இவர் குறித்த அப்டேட்டுகள் வெளிவரும் போது அது மிகவும் வைரலாகி வருவதுடன், ரசிகர்களை ஆரவாரமாக்குகிறது. அந்த வகையில் தளபதி விஜய் அவர்கள், தனது அடுத்த படம் புகழ்பெற்ற வெங்கட் பிரபுவுடன் இருப்பதாக அறிவித்தது ரசிகர்களைக் குஷிபடுத்தியுள்ளது.
தற்சமயம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் “தளபதி 67” என அழைக்கப்பட்ட திரைப்படமான லியோ படத்திற்கான சூட்டிங் நடைபெற்று கொண்டிருக்கிறது. மேலும், இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிகை த்ரிஷா நடித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, தற்போது மாநாடு படம் இயக்குநரான வெங்கட் பிரபுவின் அடுத்த படத்தில் நடிகர் விஜய் நடிக்க உள்ளதாக அறிவிப்புகள் வெளியாகி உள்ளது. இத்திரைப்படத்திற்கு தற்காலிகமாக “தளபதி 68” எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. மேலும், வரும் 2024 ஆம் ஆண்டு இத்திரைப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளது. இத்திரைப்படத்தின் மற்ற நடிகர், நடிகைகள் குறித்த விவரங்கள் எதுவும் தற்போது வெளியிடப்படவில்லை.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…