இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் படத்தின் மாஸ் அப்டேட் வெளியாகியுள்ளது.
மாநகரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ், அதன் பின்னர் கைதி, மாஸ்டர், விக்ரம் என சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து முன்னணி இயக்குனராக மாறிவிட்டார்.
இந்நிலையில், மாஸ்டர் படத்திற்கு பிறகு மீண்டும் விஜயுடன் இணையும் லோகேஷ் கனகராஜ், தளபதி 67 படத்தை இயக்க உள்ளார். இதில் விஜய்க்கு ஜோடியாக நீண்ட வருடங்களுக்கு பிறகு த்ரிஷா நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும் ஆக்ஷன் கிங் அர்ஜுன், இயக்குனர்களான கௌதம் மேனன் மற்றும் மிஷ்கின், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், பிரியா ஆனந்த், ஜனனி உள்ளிட்ட பலரும் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது.
படத்தில் பகத் பாஸில் இணைந்துள்ளதாகவும், நடிகர் கமல் சிறப்பு தோற்றத்தில் நடிப்பதாகவும், நடிகர் விக்ரம் மெயின் வில்லனாக நடிப்பதாகவும் தொடர்ந்து பல்வேறு தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வந்தன.
இந்நிலையில், தளபதி 67 திரைப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் கதாநாயகனாக நடிக்கிறார் மற்றும் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார் என்ற தகவல் மட்டும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படம் ஜனவரி 2 ஆம் தேதியே பூஜையுடன் தொடங்கி விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. படம் குறித்த அதிகாரப்பூர்வ போஸ்டர் வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தினாலும், படத்தில் நடிக்கும் இதர நடிகர்கள் குறித்த எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…