Tue ,Jul 23, 2024

சென்செக்ஸ் 80,429.04
-73.04sensex(-0.09%)
நிஃப்டி24,479.05
-30.20sensex(-0.12%)
USD
81.57
Exclusive

22 மணி நேரத்தில் எடுக்கப்பட்ட திரைப்படம்.. விவரம் உள்ளே

Aruvi Updated:
22 மணி நேரத்தில் எடுக்கப்பட்ட திரைப்படம்.. விவரம் உள்ளேRepresentative Image.

சென்னை: கலைஞர் நகர் என்ற படம் 22 மணி நேரம் 53 நிமிடங்களில் எடுக்கப்பட்டுள்ளது. அந்தப் படக்குழு இன்று செய்தியாளர்களை சந்தித்தது.

பிதா என்ற திரைப்படத்தை 23.23 மணி நேரம் இயக்கிய இயக்குனர் சுகன் குமார் அடுத்த படைப்பான கலைஞர் நகர் என்ற திரைப்படத்தை 23 மணி நேரம் அடைவதற்கு 7 நிமிடத்திற்கு முன்பாகவே, அதாவது 22.53 மணி நேரத்திற்குள் முடித்து சாதனை படைத்துள்ளார். சுகன் குமார் இயக்கத்தில் ப்ரஜின், ப்ரியங்கா, லிவிங்ஸ்டன் ஆகியோர் நடிக்கும் கலைஞர் நகர் படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னை வடபழனியில் நடைபெற்றது. மேடையில் சிறப்பு விருந்தினர்கள் அனைவருக்கும் மரக்கன்று வழங்கப்பட்டது. அப்போது பேசிய இயக்குநர் சுகன் குமார்ர், “சில இயக்குநர்கள் எல்லாம் திணறிட்டு இருக்கிறார்கள். 24 மணி நேரத்தில் படம் உருவாக்குவதற்கு... பெரிய பெரிய இயக்குநர்கள் எல்லாம் பிரம்மாண்டமாக படம் எடுக்கிறார்கள். இந்த சிறிய படத்தை பிரம்மாண்டமாக எடுத்துள்ளோம்.

22 மணி நேரத்தில் எடுக்கப்பட்ட திரைப்படம்.. விவரம் உள்ளேRepresentative Image

இந்த படத்தை 23 மணி நேரத்துக்கு முன்னதாகவே 7 நிமிடங்களுக்கு முன் முடித்து விட்டோம்.  மேடை நடனக் கலைஞர்களை மையப்படுத்தி இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது.  படத்தை எடுத்ததற்கு நான் மட்டும் முக்கிய காரணம் கிடையாது. இதில் என்னுடைய கடைசி உதவியாளர் வரைக்கும் உழைத்திருக்கிறார். கேமிராமேன் இளையராஜா, எடிட்டர் சந்தீப், இசையமைப்பாளர் நரேஷ், நடிகர்கள் பிரஜின், பிரியங்கா, ஐஸ்வர்யா, திருக்குறழி, விஜய் ஆனந்த், ரவி, ரஞ்சித் இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். எனது மனைவி உள்பட அனைவரும் தான். படம் எடுத்தாலும் அதில் 3 பாடல்கள், 2 சண்டை, காமெடி என எல்லாமே இருக்கிறது.

இது முழுக்க முழுக்க மேடை நடனக் கலைஞர்களை மையப்படுத்தி, உண்மை சம்பவத்தை தெளிவாக காண்பித்துள்ளோம்.  இதை ஊடகத்துறையினர் மக்கள் மத்தியில் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.

22 மணி நேரத்தில் எடுக்கப்பட்ட திரைப்படம்.. விவரம் உள்ளேRepresentative Image

சின்னத்திரை இயக்குநர் சங்கத்தலைவர் தளபதி பேசுகையில், “தமிழ்நாடு சின்னத்திரை இயக்குநர் சங்கம் சார்பில் ஒரு பிரம்மாண்ட நிகழ்ச்சியை நேரு அரங்கில் நடத்த திட்டமிட்டு வருகிறோம். இன்று இந்த சங்கம் பெருமைப்படுகிறது என்றால் அதற்கு இயக்குநர் சுகன்தான் காரணம். சுகன் குமாரும் இந்த சங்கத்தின் உறுப்பினர். உதவி இயக்குநர்கள் பல பிரச்சினைகளை தாண்டி லட்சியத்தை வெல்ல சுகன் குமாரின் இந்த முயற்சி, உத்வேகத்தை தரும்” என்றார்.

நடிகை ப்ரியங்கா பேசுகையில், “மிக மிக அவசரம் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.  இந்த படம் 23 மணி நேரத்தில் எடுக்கப்பட்ட படம்.  ஒரு மாற்றத்தை கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் மிக குறைவான படங்களில் நடித்து வருகிறேன். மிகப்பெரிய இடத்துக்கு வரவேண்டும் என்று ஆசை. இந்த காலகட்டத்துக்கு நிறைய நடிகை வருகிறார்கள். அவர்களுடைய திறமைக்கு முன்னுரிமை கொடுத்து அவர்களையும் வர வைக்க வேண்டும்” என்றார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்