Thendral Vanthu Ennai Thodum Today Episode: கடவுளே! இப்படியெல்லாம் ட்விஸ்ட் கொண்டார கூடாது. தென்றல் வந்து என்னை தொடும் சீரியல் அடுத்த லெவலுக்கு போய்ட்டாங்க போங்க.
பவானியை கொன்று எதுவும் நடக்காதது போல அபிக்கு தாலி கட்டி சராசரி வாழ்க்கையை நடத்துறான் வெற்றி. என்ன தான் அப்படி இருந்தாலும், உள்ளுக்குள்ள பீதி இருந்தே தான் இருக்குது. என்னைக்கு நம்ப மாடுவோம்னு! அதுல பாருங்க அபியோட பிரெண்டு தர்ஷன் திடீர்னு போலீஸ்காரரா வந்து நிக்கிறாரு. அது வெற்றிக்கு கூடுதல் பயத்த ஏற்படுத்துது. அடுத்து அபி வெற்றிய கூட்டிட்டு ட்ரெஸ் எடுக்க துணி கடைக்கு கூட்டிட்டு போறா. அங்க பாத்தீங்கன்னா மேனேஜர் சேல்ஸ் வேலை செய்யும் பெண்களிடம் கறாராக நடத்துகிறான்.
அப்புறம் அபி வெற்றி அந்த பொண்ணுங்க கிட்ட என்ன எதுன்னு விசாரிக்கிறாங்க. அப்புறம் வெற்றியை தனியா அனுப்பி அபி கேக்குறாள். அந்த பொண்ணுங்க பாவம் அழுதுட்டே, தப்பு பண்ணா அடிக்கிறாங்க, பாத்ரூம் யூஸ் பண்ண விடமாற்றங்கன்னு புலம்புறாங்க. அப்புறம் அபி எப்படியோ அவங்கள வெளிய கூட்டிட்டு போய் ஹெல்ப் பண்றா. ஆனா அங்க வெற்றிக்கு ஒரு ஷாக்! நாம்ப கொன்ன பவானி எப்படி இங்க உயிரோட இருக்கானு. பார்த்த அது பவனியோட இரட்டை சகோதரராம். அண்ணன் சாவுக்கு பலி வாங்க வந்துருக்காராம். அப்புறம் தர்ஷன் கிட்ட சொல்லி அங்க என்ன நடக்குதுன்னு விசாரிக்க சொல்கிறாள். ஆனா நம்ப ஆளு யாரு, ஆர்வ கோளாறுல.
வீட்டுக்கு போய் தல வலிக்குதுன்னு சொல்லி தூங்குற மாறி ட்ராமா போட்டு கடைக்கு போய் அந்த மேனேஜர அடி சாத்து சாத்துன்னு சாத்துறாரு. அடிஸ்டு அங்க இருந்து எஸ்கேப் ஆகுறான். அங்க வந்த தர்ஷன், பாத்தா வெற்றி மாறியே இருக்காருன்னு டவுட்டா பாக்குறாரு. ஏன்னா, முகத்தை மூடிட்டு அடிச்சனால தெர்ல. உடனே அபிக்கு போன் பண்ணி கேட்ட அங்க வெற்றி இருக்குறாருன்னு தெரியுது. அப்புறம் கடைக்கு போய் கேட்டதுக்கு ஒன்னும் இல்ல நான் கீழ விழுந்து அடி பற்றுச்சுன்னு சமாளிக்கிறான் மேனேஜர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…