பவானியை கொன்றதாக கைதான வெற்றியை தன்னுடைய வாதத்திறமையால் காப்பாற்றிய ஜட்ஜ் சங்கரநாராயணன். அடுத்து நடக்கப்போகும் சுவாரஸ்ய தருணங்கள் என்ன என்பதை தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.
வெற்றி அபி குடும்பத்தினர் மகிழ்ச்சியாக இருக்கும் தருணத்தில் தர்ஷன் வெற்றி தான் பவானியை கொலை செய்ததாக கூறி கைது செய்கிறார். வெற்றியும் அதனை ஒப்புக் கொண்டு அவர்களுடன் செல்கிறான். குடும்பத்தினர் அனைவரும் வெற்றியை தவறாக பேசும் பொழுது அபி அதனை ஏற்க மாறுகிறாள். தன்னுடைய கணவன் வெற்றி தெரிந்தும் கூட யாரையும் கொலை செய்ய மாற்றார் என்று மனதார நம்புகிறாள். எனவே, தன்னுடைய தந்தையை வெற்றிக்காக வாதாடும் படி கேட்டுக்கொள்கிறாள்.
அவரும் அதற்கு ஒப்புக்கொண்டு ஜெயிலில் இருக்கும் வெற்றியை பார்த்து என்ன நடந்தது என்று விசாரிக்கிறார். வெற்றியும் நடந்ததை ஒன்று விடாமல் கூறுகிறான். அதனை கேட்டதும் சங்கரநாராயனுக்கு ஒரு நம்பிக்கை வருகிறது. தன்னுடைய மருமகன் எந்த ஒரு தவறையும் செய்யவில்லை என்று அவரும் ஏற்றுக்கொள்கிறார். எனவே, வெற்றிக்கு ஜாமீன் வாங்க குடும்பத்தில் இருப்பவர்களின் வாக்குமூலத்தை கேட்டு வாங்கிக்கொண்டு அனைவரும் நீதிமன்றத்திற்கு செல்கின்றனர்.
வழக்கு விசாரணைக்கு வரும் போது அரசு தரப்பு வக்கீல் வெற்றி தான் குற்றவாளி என்று தீர்க்கமாக நம்பி வாதாடுகிறார். பிறகு சாட்சி சொல்ல வந்த பூங்காவனம் வெற்றி தான் பவானியை கொலை செய்தான் என்று ஆணித்தனமாக கூறுகிறார். வழக்கு மொத்தமும் வெற்றிக்கு எதிராக இருப்பதை பார்த்து ராதா மற்றும் பவானியின் சகோதரர் மகிழ்ச்சியடைகின்றனர். ஆனால் சங்கரநாராயணன் தன்னுடைய வாதத்தால் வெற்றி நிரபராதி என்று நிரூபித்துவிடுகிறார். நாளைய எபிசோடில் தர்ஷன் பவானி செய்த அனைத்து உண்மைகளையும் பூங்காவனத்திடம் கூறுகிறான். தான் செய்த தவறுக்கு வெற்றியிடம் மன்னிப்பு கேட்ட பூங்காவனம் வெற்றியை பார்க்க செல்ல, நடந்ததை கூறி மன்னிப்பு கேட்கிறார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…