திருமகள் சீரியல்: கடந்த 12 அக்டோபர் 2020-இல் இருந்து சன் டிவியில் திங்கள் முதல் சனி வரை மதியம் 12.00 மணிக்கு ஒளிப்பரப்பாகும் சீரியல் திருமகள் . ஜெமினி டிவியில் ஒளிபரப்பான 'அதோ அத்தம்மா குதுரோ' என்ற தெலுங்கு சீரியலின் ரீமேக்காக எடுக்கப்பட்டாலும், பின்னர் கதைக்களம் மாற்றப்பட்டுள்ளது. இதில் முக்கிய கதாபாத்திரமாக ஹரிகா சாது, சுரேந்தர் சண்முகம் ஆகியோர் நடித்துள்ளனர். இல்லத்தரசிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் இந்த சீரியலில் நடித்துள்ள நடிகர், நடிகைகளின் உண்மையான பெயர்கள், கதை, நேரம், இன்றைய எபிசோடு மற்றும் ப்ரோமோ உள்ளிட்ட முழு விவரங்களையும் இப்பதிவின் மூலம் விரிவாக பார்க்கலாம்.
திருமகள் சீரியல் நடிகை, நடிகர்கள்:
உண்மையான பெயர் [Real Name] |
கதாபாத்திரத்தின் பெயர் [Character Name] |
ஹரிகா சாது |
அழகி/அஞ்சலி ராஜா |
சுரேந்தர் சண்முகம் |
ராஜகுமாரன் |
ஜீவா ரவி |
பரமேஸ்வரன் |
ரேவதி சங்கர் |
ராஜலட்சுமி |
பிரகாஷ் ராஜன் |
கேசவன் |
சகீதா வி |
சுலோக்சனா மணிகண்டன் |
கோவை பாபு |
மணிகண்டன் |
சுஷ்மா நாயர் |
பிரகதி ஜெயராமன் |
ரேகா சுரேஷ் |
பவானி சந்திரசேகர் |
வெங்கட் சுபா |
சத்தியமூர்த்தி |
ஜீவிதா |
ஆனந்தவல்லி |
அனுராதா |
வானமாதேவி |
திருமகள் சீரியல் முழு விவரம்:
சீரியல் பெயர் |
திருமகள் |
சேனல் |
சன் டிவி |
ரிலீஸ் தேதி |
12 அக்டோபர் 2020 |
ஒளிப்பரப்பு நேரம் |
12.00 PM - 01.00 PM [25-27 நிமிடங்கள்] |
ஒளிப்பரப்பாகும் நாள் |
திங்கள் முதல் சனி வரை |
இயக்குநர் |
ஹரிஷ் ஆதித்யா [1-50 எபிசோட்] எம். இனியன் தினேஷ் [51-122 எபிசொட்] எஸ்.ஆனந்த் பாபு இனியன் தினேஷ் [தற்போது] |
தயாரிப்பாளர் |
டி.ஜி. தியாராஜன், செல்வி தியாகராஜன் |
தயாரிப்பு நிறுவனம் |
சன் என்டர்டெயின்மென்ட், சத்யா ஜோதி பிலிம்ஸ் |
ஓடிடி தளம் |
Sun Nxt |
திருமகள் சீரியலின் கதை..
அஞ்சலி மற்றும் ஐஸ்வர்யா இருவரும் பிறகும் போது தற்செயலாக இடமாற்றம் செய்யப்படுகின்றனர். அஞ்சலி நடுத்தர குடும்பத்திலும், ஐஸ்வர்யா கோடீஸ்வர குடும்பத்திலும் வளர்கின்றனர். வருடங்கள் ஆக இருவரும் வளர்ந்த பின்னர் அவரவர் குடும்பங்கள் தங்களுக்கானது இல்லை என்பதை உணர்கின்றனர். இவர்கள் இருவரும் காலத்தின் கட்டாயத்தில் அடிக்கடி சந்தித்துக் கொள்கின்றனர். பின்னர் அவர்கள் இருவரும் சிறு வயதில் தொலைந்து போன சகோதரிகள் என்பதும், பிறந்த பிறகு மாற்றி வைக்கப்பட்ட விஷயமும் அவர்களுக்கு தெரிய வருகிறது.
இதனைத் தொடர்ந்து உண்மையை தெரிந்துக்கொள்ள முயற்சிக்கும் போது தங்கள் குடும்பத்தினரின் பொய் மற்றும் ரகசியங்கள் கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வர ஆரம்பிக்கின்றனர். ஆனால் இவர்களுக்கு உண்மை எதுவவும் தெரிய கூடாது என்பதற்காக இரண்டு குடும்பத்தினரும் கடினமாக முயற்சிக்கின்றனர். உண்மையை தெரிந்துக்கொள்ளும் பாதையில் அஞ்சலி மற்றும் ஐஸ்வர்யா மேற்கொள்ளும் கஷ்டங்கள், சூழ்ச்சிகள் இவற்றையெல்லாம் தாண்டி உண்மை வெளிவருமா என்பது தான் கதைக்களம்.
திருமகள் சீரியல் இன்றைய எபிசோட்
திருமகள் சீரியலின் இன்றைய எபிசோடை பார்க்க இதை க்ளிக் செய்யவும்.
டிவியில் ஒளிப்பரப்பாவதற்கு முன்னபாக, சன் டிவி வெளியிடும் திருமகள் சீரியலின் ப்ரோமோவை பார்க்க இதை க்ளிக் செய்யவும்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…