Thu ,Feb 09, 2023

சென்செக்ஸ் 60,663.79
377.75sensex(0.63%)
நிஃப்டி17,871.70
150.20sensex(0.85%)
USD
81.57
Exclusive

மலேசியாவில் கெத்து காட்டிய துணிவு...!

UDHAYA KUMAR Updated:
மலேசியாவில் கெத்து காட்டிய துணிவு...!Representative Image.

அஜித்குமார் நடிப்பில் பொங்கல் விருந்தாக வெளியான துணிவு படம் தமிழகம் மட்டுமல்ல உலகம் முழுக்க நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. மலேசியாவிலும் வெளியான இந்த படத்தின் வசூல் ரீதியாக பட்டையைக் கிளப்பி வருகிறது. 

ஹெச் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரித்துள்ள படம் துணிவு. பொங்கல் விருந்தாக கடந்த ஜனவரி 11ம் தேதி வெளியான இந்த படம் மலேசியாவிலும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. கூட்டம் கூட்டமாக மக்கள் இந்த படத்தைக் காண திரையரங்குகளுக்கு படையெடுத்து வருகின்றனர். இதனால் அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். 

இதேநாளில் வெளியான விஜய்யின் வாரிசு திரைப்படமும் மலேசியாவில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இருந்தாலும் வாரிசு படத்தை விட துணிவு படம்தான் ரசிகர்கள் அதிகம் விரும்பி பார்க்கும் படமாக இருக்கிறது. இரண்டு படங்களுக்கும் கலவையான விமர்சனங்கள் இருக்கின்றன. என்றாலும் வாரிசு படம் குடும்பத்தினர் கொண்டாடும் படமாக புரமோட் செய்யப்பட்டதினால் இளைஞர்கள் பலர் துணிவையே தேர்ந்தெடுக்கின்றனர். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்