Sat ,Apr 20, 2024

சென்செக்ஸ் 73,088.33
599.34sensex(0.83%)
நிஃப்டி22,147.00
151.15sensex(0.69%)
USD
81.57
Exclusive

தமிழ்நாட்டின் டாப் 10 யூடியூப் சேனல்…! இந்த வருஷம் இவங்க தான் டாப்…

Gowthami Subramani Updated:
தமிழ்நாட்டின் டாப் 10 யூடியூப் சேனல்…! இந்த வருஷம் இவங்க தான் டாப்…Representative Image.

சமூக செயலிகளில் ஒன்றான யூடியூப் பெரும் பிரபலமாகி மக்களுக்கு பணம் ஈட்டும் செயலியாக மாறி பயன்பட்டு வருகிறது. நாள்தோறும் வேலை செய்வது போல, மீதி நேரங்களில், யூடியூப்-ல் வீடியோ பதிவிட்டு, அதன் மூலம் வருமானத்தை ஈட்டி வந்தவர்கள் சிலர் தற்போது முழு நேரமாக இறங்கி விட்டனர். அதிலும் கொரோனா காலத்தில் முழுநேர வேலையாகவே மாறிய யூடியூப் சேனல், சில யூடியூபர்களுக்கு பெருமளவில் பயன்களை அளித்தது. தமிழகத்தில் பல்வேறு யூடியூபர்ஸ், அவர்களின் முயற்சியில் ஏராளமான பார்வையாளர்களையும், ஃபாலோவர்ஸையும் வைத்துள்ளனர். அந்த வகையில் தற்போது தமிழகத்தில் 2022 ஆம் ஆண்டிற்கான டாப் யூடியூப் சேனல்ஸ் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.

தமிழ்நாட்டின் டாப் 10 யூடியூப் சேனல்…! இந்த வருஷம் இவங்க தான் டாப்…Representative Image

வில்லேஜ் ஃபுட் ஃபேக்டரி

யூடியூப் சேனலின் பெயரிலே இந்த சேனல் எதை அடிப்படையாகக் கொண்டது என்பதைத் தெரிந்து கொள்ளலாம். இந்த யூடியூப் சேனலில், டாடி ஆறுமுகம் என்பவர், கிராமத்து சமையல் முறைப்படி, இல்லத்தரசிகளுக்குத்ட் தேவையான அனைத்து வகையான சமையல் கலைகளையும் வீடியோ மூலம் பதிவிடுவர். மேலும், இந்த சேனலில் சமைக்கப்படும் உணவுகளை பதிவிடுவது மட்டுமல்லாமல், பல்வேறு இடங்களில் நிறைய பேருக்கு வழங்குவர். மேலும், இந்த சேனலின் மூலம் கிடைத்த வருமானம் மூலம் இவர்கள் மதுரையில் டாடி ஆறுமுகம் என்ற பெயரில் ஓட்டல் ஒன்று திறந்திருப்பது குறிப்பிடத்தக்கது. மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற இந்த சேனலானது 19.1 மில்லியன் சப்ஸ்கிரைபர்ஸ்களைக் கொண்டு முதலிடத்தில் உள்ளது.

தமிழ்நாட்டின் டாப் 10 யூடியூப் சேனல்…! இந்த வருஷம் இவங்க தான் டாப்…Representative Image

பிகைன்ட்வுட்ஸ் சேனல்

சினிமா நட்சத்திரங்களைப் பற்றி தெரிந்து கொள்ள விரும்புபவர்களுக்கு இந்த சேனல் உதவியாக இருக்கும். இந்த சேனலில் பெரும்பாலான புகழ்மிக்க நடிகர், நடிகைகளிடம் அவர்களுடைய வாழ்க்கையைப் பகிர்ந்து கொள்ளுமாறு அமையும் வீடியோக்கள் பதிவிடப்படும். இவ்வாறு பதிவு செய்யப்படும் வீடியோக்களில் வரும் காமெடிக் காட்சிகள், சூட்டிங் ஸ்பாட்டில் நடந்ததை கூறுவது மக்களிடையே அதிக ஆர்வத்தைத் தூண்டியது. இந்த சேனலானது, 10.4 மில்லியன் சப்ஸ்கிரைபர்ஸைக் கொண்டு இரண்டாம் இடத்தில் உள்ளது.

தமிழ்நாட்டின் டாப் 10 யூடியூப் சேனல்…! இந்த வருஷம் இவங்க தான் டாப்…Representative Image

மைக்செட்

மைக்செட் சேனலில் பதிவிடப்படும் வீடியோக்கள் காமெடியாக ரியல் டைமில் எல்லோர் வாழ்விலும் நடப்பதை எடுத்துக் கூறும் வகையிலும் அமைவதால் இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதில் சோதனைகளை அடிப்படையாகக் கொண்டு பதிவிடப்படும் வீடியோக்கள், சோகத்தில் இருப்பவர்களைக் கூட சந்தோஷமாக மாற்றும். இந்த வீடியோக்கள் ரசிகர்களால் பெரிது கவரப்பட்டதுடன், இந்த சேனல் அதிகப்படியான சப்ஸ்கிரைபர்ஸை 7.66 மில்லியனைக் கொண்டு மூன்றாம் இடத்தில் உள்ளது.

தமிழ்நாட்டின் டாப் 10 யூடியூப் சேனல்…! இந்த வருஷம் இவங்க தான் டாப்…Representative Image

மதன் கௌரி

ஒரு ஃபேமஸ் யூடியூப் சேனல் என்றாலே மதன் கௌரி சேனல் என்றே கூறலாம். காதல் தோல்வியில் மதன் கௌரியால் ஆரம்பிக்கப்பட்ட யூடியூப் சேனலின் மூலம், மீண்டும் அதே காதல் வெற்றியில் முடிந்தது. இந்த சேனலில் பதிவிடப்படும் வீடியோக்கள் மக்கள் நாள்தோறும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்றாகத் தான் இருக்கும். ஒரு சிலரால், எல்லா செய்தித் தாள்களையும் படித்து, அதில் உள்ளவற்றைத் தெரிந்து கொள்ள இயலாது. இந்த சேனலின் மூலம், டிரெண்டிங்கில் நடந்த நிறைய வீடியோக்களைக் காணலாம். இதில், மதன் கௌரி விருது ஒன்றையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சேனலானது 6.54 மில்லியன் சப்ஸ்கிரைபர்ஸைக் கொண்டு நான்காம் இடத்தில் உள்ளது.

தமிழ்நாட்டின் டாப் 10 யூடியூப் சேனல்…! இந்த வருஷம் இவங்க தான் டாப்…Representative Image

மெட்ராஸ் சமையல்

இந்த சேனலானது ஏஞ்செலா ஸ்டெஃபி என்பவரது ஆகும். இதில் உணவுப் பொருள்கள் மட்டுமல்லாமல், அனைத்து வகையான ஸ்நேக்ஸ், எப்படி வீட்டிலேயே காய்கறிகளை வளர்ப்பது உள்ளிட்ட அனைத்தும் பதிவிடப்படும். இது அனைவருக்கும் உபயோகமாக இருப்பதுடன், அனைவரும் விரும்பிப் பார்க்கக் கூடிய ஒன்றாக அமைகிறது. பல்வேறு வெரைட்டியான டிசஸ்கள் தயாரிக்கப்படுவது இந்த சேனலின் மூலம் பதிவிடப்பட்டு வருகிறது. இந்த சேனலும், 5.56 மில்லியன் சப்ஸ்கிரைபர்ஸைக் கொண்டு ஐந்தாம் இடத்தில் உள்ளது.

தமிழ்நாட்டின் டாப் 10 யூடியூப் சேனல்…! இந்த வருஷம் இவங்க தான் டாப்…Representative Image

நக்கலைட்ஸ்

இந்த சேனலில் வரும் வீடியோக்கள், பள்ளி, கல்லூரி கதைகளையும் அடிப்படையாகக் கொண்டு விளங்குவதாக அமையும். இதில் வரும் வெப் சீரிஸ், பெரும்பாலானோரை ஈர்ப்பதாக அமையும். நிகழ்கால வாழ்க்கை முறையை அடிப்படையாகக் கொண்டு அமையும், இந்த வெப் சீரிஸ்கள், ஏராளமான சப்ஸ்கிரைபர்ஸ் வரக் காரணமானது. அதன் படி, இந்த சேனல் 4.88 மில்லியன் சப்ஸ்கிரைபர்ஸ் கொண்டு ஆறாம் இடத்தில் உள்ளது.

தமிழ்நாட்டின் டாப் 10 யூடியூப் சேனல்…! இந்த வருஷம் இவங்க தான் டாப்…Representative Image

பிளேக் ஷீப்

பிளேக் ஷீப் சேனலானது, பல்வேறு சினிமா வீடியோக்களையும், ஏராளமான கதாபாத்திரங்களைக் கொண்டு நிறைய வீடியோக்களையும் மக்களின் எதிர்பார்ப்பிற்கு ஏற்றவாறு பதிவிட்டு வருகின்றன. இதில் கூறப்படும் கருத்துக்கள், ரசிகர்கள் விரும்புவதாகவும், ஆக்கப் பூர்வமாகும் அமைகின்றன. இந்த சேனலானது தற்போது, 4.54 மில்லியன் சப்ஸ்கிரைபர்ஸ் களைக் கொண்டு ஏழாம் இடத்தில் உள்ளது.

தமிழ்நாட்டின் டாப் 10 யூடியூப் சேனல்…! இந்த வருஷம் இவங்க தான் டாப்…Representative Image

பரிதாபங்கள்

பரிதாபங்கள் சேனலானது கோபி என்பவரால் செயல்படுத்தப்பட்டு, நிறைய சப்ஸ்கிரைபர்ஸ்களைக் கொண்டுள்ளது. இதில் ட்ரெண்டிங் அடிப்படையில் மக்களுக்கு சந்தோஷத்தை அளிக்கும் வகையில், நிறைய காமெடி வீடியோக்களைப் பதிவிடுவர். இந்த சேனலும், மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. கோபியின் பரிதாபாங்கள் சேனலானது 4.1 மில்லியன் சப்ஸ்கிரைபர்ஸ் கொண்டு எட்டாம் இடத்தில் உள்ளது.

தமிழ்நாட்டின் டாப் 10 யூடியூப் சேனல்…! இந்த வருஷம் இவங்க தான் டாப்…Representative Image

டிடிஎஃப்

ட்வின் த்ரோட்டில்ஸ் டிடிஎஃப் என்ற சேனலை டிடிஎஃப் வாசன் என்பவர் செயல்படுத்தி வருகிறா. இந்த சேனலில், புதிதாக வந்த இரு சக்கர வாகனங்கள், அவற்றின் பல்வேறு சிறப்பம்சங்கள் குறித்து விளக்கப்படும். இது இளைஞர்களுக்கிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதுடன், அதிகப்படியான ஃபாலோவர்ஸ் ஆக, 3.36 மில்லியன் சப்ஸ்க்ரைபர்ஸ் வைத்து 9 ஆவது இடத்தில் உள்ளது.

தமிழ்நாட்டின் டாப் 10 யூடியூப் சேனல்…! இந்த வருஷம் இவங்க தான் டாப்…Representative Image

இர்ஃபான்ஸ் வியூவ்

இர்ஃபான் என்பவரால் இந்த சேனல் நடத்தப்பட்டு வருகிறது. இந்த சேனலில், பல்வேறு இடங்களில் உள்ள பல்வேறு விதமான உணவுப் பொருள்கள் மக்களுக்குக் காட்சிபடுத்தப்படுகின்றன. இந்த சேனலும், மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த சேனலானது 3.34 மில்லியன் சப்ஸ்கிரைபர்ஸைக் கொண்டு 10 ஆவது இடத்தில் உள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்