Mon ,Sep 26, 2022

Exclusive

தளபதி 67ல் நடிக்கிறீர்களா.. அதிர்ச்சி பதிலளித்த த்ரிஷா!

UDHAYA KUMAR September 20, 2022 & 19:20 [IST]
Representative Image. Representative Image.

தளபதி விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை வரும் 2023ம் ஆண்டு பொங்கலுக்கு திரைக்கு கொண்டு வரும் முயற்சியில் இருக்கிறது படக்குழு. இதனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 படத்தில் நடிக்க காத்திருக்கிறார் விஜய்.


தளபதி 67 படம் வரும் டிசம்பர் மாதம் முதல் படப்பிடிப்பைத் துவங்கும் என தெரிகிறது. இந்நிலையில் இந்த படத்தில் த்ரிஷா பல ஆண்டுகளுக்குப் பின் விஜய்யுடன் இணைந்து நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில் இது குறித்த கேள்விக்கு பதிலளித்தார் த்ரிஷா.


பொன்னியின் செல்வன் பட புரோமோசனில் பேசிய த்ரிஷாவிடம், இதுகுறித்த கேள்வியாக நீங்கள் தளபதி 67ல் நடிக்கிறீர்களா என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த த்ரிஷா, இந்த நிகழ்ச்சியில் பொன்னியின் செல்வன் படம் குறித்துதான் பேச வேண்டும் என ஸ்ட்ரிக்ட்டாக கூறியிருக்கிறார்கள் என்று பதிலளித்தார்.

Tag: Trisha At Thalapathy 67 | Trisha About Vijay | Thalapathy 67 Actress | Thalapathy 67 Villain | Thalapathy 67 Wikipedia | Thalapathy 67 Producer | Thalapathy 67 And Vikram | Thalapathy 67 Twitter | Thalapathy 67 Story |.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

Related Posts